மு.வ.பரணன் அவர்கள்
திருச்சிராப்பள்ளியின் பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) பொறியாளராகப் பணிபுரிந்தவரும், பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும்,
தமிழ்த்தேசிய எண்ணம் கொண்டவருமான அறிஞர் மு.வ. பரணன் அவர்கள் சற்றுமுன்னர் 04.05.2013
இரவு 11 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் தம் இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை
எய்தினார் என்ற செய்தியை அறிவிப்பதில் வருத்தமுறுகின்றேன்.
மு.வ. பரணன் அவர்கள் 29.05.1946 இல் திருச்சிராப்பள்ளி
நடுப்பட்டியில் பிறந்தவர் இவர். பாவாணர் தமிழ்நூறு, ஆண்டகை, தமிழ் ஐந்திணை முதலான நூல்களின்
ஆசிரியர். தெளிதமிழ் ஏட்டின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு உழைத்தவர். அறிஞர் மு.வ.பரணன்
அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எம்
ஆழ்ந்த இரங்கல். 05.05.2013 ஞாயிறு மாலை திருச்சிராப்பள்ளியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட
உள்ளது.
தொடர்புக்கு:
9894057167
3 கருத்துகள்:
அவர் குடும்பத்தாருக்கு என் ஆழந்த இரங்கல். நன்றி இளங்கோவன்
தாமரையம்மையார் இறப்பன்று பார்த்தது. இறப்பை நம்பஇயலவில்லை. ஆழ்ந்த இரங்கல். இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரும்போலும்.முனைவர் க.தமிழமல்லன்
ஆழ்ந்ம வருத்தங்கள்
கருத்துரையிடுக