நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 20 மே, 2013

தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் மறைவு



பறம்பை அறிவன்
மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரானர் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும் பாவாணரின் உலகத் தமிழ்க்கழக மாநாட்டைப் பரமக்குடியில் நடத்துவதற்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்குப் பெருந்துணைபுரிந்தவருமான தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் அவர்கள் 19.05.2013 மாலை 5.30 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாகத் தம் எழுபத்தேழாம் அகவையில் மதுரையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

பறம்பை அறிவன் அவர்களின் இயற்பெயர் மு.பெ.நளபதி. பெற்றோர் பெரியசாமி, கருப்பாயி ஆகியோர் ஆவர். இவர் பரமக்குடியை அடுத்த எமனேசுவரத்தில் பிறந்தவர். ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழியம் என்ற இதழை நடத்தி வந்தவர். இப்பெருமகனார் இரா.லீலாவதி என்னும் அம்மையாரை மணந்து, மூன்று ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்த பெருமைக்குரியவர். தமிழிய வரலாற்றுப் பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவந்தார். தனித்தமிழ் இயக்கத்திற்கு அன்னாரின் மறைவு பேரிழப்பாகும்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.