நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மு.வ.பரணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.வ.பரணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 மே, 2013

தனித்தமிழ் அன்பர் மு.வ.பரணன் அவர்கள் மறைவு



மு.வ.பரணன் அவர்கள்

திருச்சிராப்பள்ளியின் பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) பொறியாளராகப் பணிபுரிந்தவரும், பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும், தமிழ்த்தேசிய எண்ணம் கொண்டவருமான அறிஞர் மு.வ. பரணன் அவர்கள் சற்றுமுன்னர் 04.05.2013 இரவு 11 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் தம் இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிப்பதில் வருத்தமுறுகின்றேன்.

மு.வ. பரணன் அவர்கள் 29.05.1946 இல் திருச்சிராப்பள்ளி நடுப்பட்டியில் பிறந்தவர் இவர். பாவாணர் தமிழ்நூறு, ஆண்டகை, தமிழ் ஐந்திணை முதலான நூல்களின் ஆசிரியர். தெளிதமிழ் ஏட்டின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு உழைத்தவர். அறிஞர் மு.வ.பரணன் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எம் ஆழ்ந்த இரங்கல். 05.05.2013 ஞாயிறு மாலை திருச்சிராப்பள்ளியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்புக்கு: 9894057167