நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 பிப்ரவரி, 2011

தமிழறிஞர் பேராசிரியர் பே.க.வேலாயுதம் மறைவு

திருச்சிராப்பள்ளி பெரியார் கல்லூரியில் பல்லாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவரும் தமிழ், ஆங்கிலம்,சமற்கிருதம் போன்ற பன்மொழி அறிந்த அறிஞரும் சங்க இலக்கியக் கால ஆய்வில் தோய்ந்தவரும் கிரேக்க வரலாற்றிலும் கிரேக்க இலக்கியங்களில் மிகச்சிறந்த புலமை பெற்றவரும் எனக்குத் தந்தையார் நிலையிலிருந்து தமிழ்ப்பற்று ஊட்டியவருமான பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள் 09.02.2011 இரவு 9.30 மணியளவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பதினேழு ஆண்டு கால நட்பு நேற்றுக் கைநழுவிப் போனமை அறிந்து கையற்றுக் கலங்குகின்றேன்.

பேராசிரியர் பே.க.வேலாயுதம் பற்றி அறிய இங்கே சொடுக்குக

பேராசிரியர் பே.க.வேலாயுதம் இல்லமுகவரி:

33,இராசாராம் சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி.
தொடர்புஎண் + 8825348100

2 கருத்துகள்:

மணிச்சுடர் சொன்னது…

அன்பிற்கினிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு,
வணக்கம், தங்கள் வலைப்பூவில் தமிழறிஞர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்களின் மறைவு பற்றிய செய்தியறிந்து சொல்லொனாத் துயரடைந்தேன். அவர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பைத் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி. அன்னாரின் மறைவு ,தமிழ்கூர் நல்லுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அன்னார் விட்டுச் சென்ற தமிழ்க்கோட்டப் பணிகளைத் தொடர்ந்து செய்வதே அவருக்கு நாம் செய்யும் வீர வணக்கமாக இருக்கும்.
ஈர நெஞ்சத்துடன்..
பாவலர் பொன்.க புதுக்கோட்டை.