நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 25 செப்டம்பர், 2010

தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்



அழைப்பிதழ்


தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் திங்கள் கிழமை (27.09.2010) காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.

காலை பத்து மணிக்குத் தொடங்கும் தொடக்க விழா பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதன்மையர் முனைவர் இரா.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் பா.இளங்கவின் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். பெரியார் சிந்தனை மையம் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் அறிமுகவுரையாற்றுகிறார். முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்குகின்றார். வ.ஊ.ஈழவேங்கை நன்றியுரையாற்றுகின்றார்.

நிகழ்ச்சி ஏற்பாடு பகுத்தறிவாளர் மன்றம்& தமிழ் மன்றம்


நிகழ்ச்சி நிரல்

3 கருத்துகள்:

Yazhini சொன்னது…

விக்கியை பற்றி நீங்கள் பயிற்சி அளிப்பது மகிழ்ச்சி. இணையத்தின் மற்ற பயன்களை இனிதாக சொல்லி தமிழரும் தமிழும் வளர வழி செய்ய்யும் தங்களை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் வலையில் உள்ள ஆபத்துக்களையும் மக்களிடம் விதையுங்கள் !!!

Thamizhan சொன்னது…

தமிழ், தமிழ் என்று பேசுவதால் தமிழ் வளராது.தங்களைப் போன்றோரின் அயராத தொண்டினால் தான் தமிழ் வளரும்,தமிழரும் உயர்வடைவர்.பல்கலைக் கழகங்களிலும்,பட்டி தொட்டிகளிலும் தமிழ் இணையத்தைப் பரப்பிச் செயல்பட்டும் வரும் தங்களுக்குப் பாராட்டுக்கள்.இளைய தலைமுறையை தமிழ் இலக்கியத்திற்கும அறிமுகம் செய்வது பயனுள்ளது.தமிழால் கட்டாயம் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையுண்டாகட்டும்.

Albert Fernando சொன்னது…

அன்பினிய முனைவர்.இளங்கோ அவர்கட்கு,
வணக்கம்.
நல்ம;நல்லன மலர்க!
சிகாகோ சென்று சற்று முன்னம் இல்லம் திரும்பினேன்.
பகுத்தறிவு பெற அல்லும்பகலும் பாடுபட்டவர் பெயர் கொண்ட‌
பல்கலையில் இணைய பயிலரங்கம் நடாத்த தாங்கள் செல்லும் சேதியறிந்தேன்.
சொல்லொணா உவகையடைகிறேன். தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்குச் சென்று
இணையபயிலரங்கு அயராமல் நடத்தி வரும் தாங்கள் சுறுசுறுப்பை எண்ணிவியக்கிறேன்;
இணையத்தில் தமிழ் வளர்க்கும் இணைய நாயகரே,
நும் பணி சிறக்கவும்,எண்ணியது எண்ணியவாறு நடந்தேற என் அடிமன வாழ்த்தை
உடனடியாக பதிவு செய்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்
வெற்றியடைய மீண்டும் என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்!

வெல்லத்தமிழ் இணையத்தில்
வெல்லட்டும்!
எல்லாத் தமிழரும் இணையத்தில்
உலவட்டும்!! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கொப்ப!"

தமிழன்போடு,
ஆல்பர்ட்,
விச்கான்சின்,
அமெரிக்கா.