நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 11 செப்டம்பர், 2010

திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்ட கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.

சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.

அவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ்.ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.

விழாவில் முனைவர் இளமுருகன் பேசியதாவது:

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபாய் தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசியதாவது:

புலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.

First Published : 11 Sep 2010 12:00:00 AM IST

நன்றி: தினமணி 11.09.2010

4 கருத்துகள்:

பெருமாள் முருகன் சொன்னது…

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? ஆசிரியர்கள் உள்ளனரா? மாணவர்கள்? விவரம் தெரிந்தால் சொல்க.
பெருமாள்முருகன்

செல்வா சொன்னது…

//திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.//

அருமையான முடிவு! வெற்றி பெற வாழ்த்துகள்!

உங்கள் தொண்டு அருமை முனைவர் இளங்கோவன்! தொடரட்டும் உங்கள் அரும்பணி!

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் குறித்து அறியத் தந்தமைக்கு நன்றிகள் தோழர்... தங்களின் வேண்டுகோள் நிறைவேற்றப் பட வேண்டுமென எனது சார்பிலும் அரசை வலியுறுத்துகிறேன் தோழர் ... பிற பதிவர்களையும்வலியுறுத்த வேண்டுகிறேன் ... நன்றிகள் பல !

Web Master சொன்னது…

திருவாரூர், உலகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆரோக்கியம் மற்றும் சமயல் தொடர்பான செய்திகளுக்கு

திருவாரூர் செய்திகள்