நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா


அழைப்பிதழ்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கு.கலையரசி அவர்கள் வரவேற்புரையும், பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அறிமுகவுரையும் ஆற்ற உள்ளனர்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற உள்ளார். க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

தமிழ் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், அருகில் உள்ள கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அவர்கள் செய்துள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தொடர்ந்து இணையத்தில் தமிழ்மணம் பரப்புவதுடன்..

எல்லோருக்கும் இதனைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற தங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது அன்பரே..

வாழ்த்துக்கள்..

Murugeswari Rajavel சொன்னது…

செம்மொழி இளம் அறிஞர்,பொருத்தமான பட்டம்.உங்களின் பணி சிறக்கட்டும்!