நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 20 மே, 2010

சிங்கை மலையகச் செலவு

 சிங்கை மலையகத் தமிழ் அன்பர்களின் அழைப்பை ஏற்று 18-05.2010 முதல் 25.05.2010 வரை பல இடங்களில் உரையாற்றவும், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு வந்துள்ளேன்.

 சிங்கப்பூரில் திரு.கோவலங்கண்ணன், திரு.குழலி ஆகியோரின் ஏற்பாட்டில் இலக்கியக் கலந்துரையாடல், வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டேன். கருத்தரங்கிலும் கட்டுரை படித்தேன்.

 நேற்று மலேசிய நண்பர்கள் திரு.முனியாண்டி, திரு.பாலா பிள்ளை ஆகியோர் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து உரையாடினர்.

 கோலாலம்பூரில் நடு இரவு பேருந்தில் புறப்பட்டு, இன்று 20.05.2010  வைகறை 4.30 மணிக்குச் சுங்கைப்பட்டாணி என்னும் ஊருக்கு வந்தேன். எழுத்தாளர் புண்ணியவான் அவர்களின் இலத்தில் தங்கியுள்ளேன்.

 இருவரும் புகழ் பெற்ற "கெடா"(கடாரம்)என்ற ஊருக்குச் செல்ல உள்ளோம்.

மலேசியாவில் பேராசிரியர் மன்னர்மன்னன், முனியாண்டி, புண்ணியவான், மாரியப்பன் ஆறுமுகனார், சுப.நற்குணனார், மதிவரன் உள்ளிட்ட அன்பர்கள் என் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: