நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 9 மார்ச், 2008

புலவர் இ.திருநாவலன் வருகை...

புலவர் இ.திருநாவலனார் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற புலவர். கடற்கரை ஊரான புதுக்குப்பத்தில் பிறந்தவர் (28.06.1940). பல்வேறு அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிபவர். புதுச்சேரியில் தமிழாசிரியர்களுக்கு மதிப்புக் கூடுவதற்குப் பல்வேறு ஆக்கப் பணிகள் செய்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர்கள்.

தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் பல பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்து நன் மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமகனார். புதுவைப்பல்கலைக்கழகத்தில் யான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது என் அச்சக ஆற்றுப்படை என்னும் நூல் வெளியிட அழைக்கப்பெற்று, ஆசிரியர் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாநோன்பிருந்ததால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. அவர் வரவில்லை என்றாலும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்னும் அன்பர் வழியாக எனக்குச் சிறப்புச் செய்து அழகு பார்த்தவர். வாழ்த்துப்பா எழுதி அனுப்பியவர்.

1992 இல் ஏற்பட்ட தொடர்பு வளர்பிறை போல் வளர்ந்தது. புதுச்சேரியில் அரசுப்பணிக்கு வந்தநாள் முதல் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் அவர்கள் இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எங்களை மகிழ்வித்தார்கள். அவர்களின் வருகை எங்கள் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தருகிறது. புலவர் பெருமானைப் போற்றி இடப்படும் பதிவு இஃது.

4 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

அய்யா அவர்களுக்கு வணக்கங்களும்
வாழ்த்துக்களும்.
தமிழாசிரியர்கட்கு தமிழாசிரியர்கள்
மரியாதை செய்வது தொடரட்டும்.என் போன்ற
தமிழன்பர்கள் எங்கள் வாழ்த்துக்களை
இருவருக்கும் தெரிவித்து மகிழ்கின்றோம்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஐயா தங்கள் அன்பான பதிவிற்கு
நன்றி.
மு.இ

manjoorraja சொன்னது…

தமிழறிஞர்களான உங்களை எல்லாம் சந்திக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்களின் சந்திப்பு.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள்அன்பிற்கு நன்றி.
மு.இளங்கோவன்