நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 மார்ச், 2008

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பன்முக நோக்கில் திருக்குறள் கருத்தரங்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 'பன்முக நோக்கில் திருக்குறள்' என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26, 27, 28 - 2008 இல் நடத்துகிறது. 

26.03.2008 காலை நடைபெற்ற தொடக்க விழாவில் முனைவர் பெ.மாதையன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றினார்.


பேராசிரியர் முனைவர் தி.முருகரத்தினம் அவர்கள் தொடக்கவிழா சிறப்புரையாற்றினார்.28.03.2008 இல் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்ற, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வ.கிருட்டிணகுமார் வாழ்த்துரை வழங்க உள்ளார். தமிழகப் பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்களின் 22 அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.


28.03.2008 காலை 10 மணிக்கு முனைவர் பழ முத்துவீரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அரங்கில் நான் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்(உரை) என்னும் தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன். இக்கட்டுரையில் திருக்குறளும் பரிமேலழகர் உரையும் தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்களை எவ்வாறு உரைகாண வைத்துள்ளன என்பதைப் பாவாணர், பெருஞ்சித்திரனார், இரா.இளங்குமரனார், பொற்கோ, கலைஞர், குழந்தை, பாவேந்தர் உரைகளின் துணையுடன் விளக்க உள்ளேன். நாளை கட்டுரை வழங்கிய பிறகு என் பக்கத்தில் அதனை வெளியிடுவேன்.

கருத்துகள் இல்லை: