சொல்லாய்வறிஞர் ப.அருளி அவர்கள் புதுச்சேரியில் பிறந்தவர். வணிகவியல், சட்டம் பயின்றவர். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச் சொல்லாய்வுகளில் இவருக்கு ஒப்புமைகாட்டமுடியாதபடி புலமைபெற்றவர். பன்மொழிகளை எடுத்துக்காட்டித் தமிழ்ச்சொல்லின் வேர் வளர்ச்சிகளை விளக்குவதில் வல்லவர். தூயதமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமூகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தின் தூய தமிழ்- சொல்லாக்க அகரமுதலிகள் துறையின் தலைவராகப்பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
பேராசிரியர் ப. அருளி அவர்களின் நூல்களுள் சில:
1. இவை தமிழல்ல...
2. அயற்சொல் அகராதி
3. அருங்கலைச்சொல் அகரமுதலி
4. இரு வானொலி
உரைகள்
5. யா
6. பெற்றோரைப் பற்றி...
7. தமிழ் சமற்கிருதம்
மற்றும் பிற ...அருளி ஆற்றிய
மொழியியல் உரைகள்(5-தொகுதி)
முகவரி:
சொல்லாய்வறிஞர்
ப.அருளி அவர்கள்
காளிக்கோயில்
தெரு, திலாசுப்பேட்டை,
புதுச்சேரி
- 605009
2 கருத்துகள்:
அய்யா,
அறிஞர் அருளியின் நூல்களை நான் கற்க விரும்புகிறேன். அவை எங்கு கிடைக்கும். நான் வெங்கலூர் வாசி.
அன்புடையீர் வணக்கம்.
அறிஞர் அருளி ஐயாவின் நூல்கள் புதுச்சேரியில் உள்ள திரு.சீனு.தமிழ்மணி அவர்களைத் தொடர்புகொண்டு பெறலாம்.
அவரின் செல்பேசி எண் :
9443622366
கருத்துரையிடுக