நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 23 மார்ச், 2007

பன்முக நோக்கில் சங்க இலக்கியம் தேசியக்கருத்தரங்கம்,புதுச்சேரி

  மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும், புதுச்சேரியில் அமைந்துள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் (PILC) இணைந்து பன்முக நோக்கில் சங்க இலக்கியம் என்னும் பொருளில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகக் கருத்தரங்க அறையில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை 23,24,25-03 2007 ஆகிய நாள்களில் நடத்துகின்றன.

  முதல் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியம் என்னும் பொருளில் மையக் கருத்துரை வழங்கினார். தமிழகத்தின் ஆய்வறிஞர்களான சி.இ.மறைமலை, த.பழமலை, க.இராசன், அ.பாண்டுரங்கன், ஆ.தட்சணாமூர்த்தி, க.பூர்ணசந்திரன், நா.மம்முது வே.ச.திருமாவளவன், க.நெடுஞ்செழியன், தே.லூர்து, ப.மருதநாயகம், ஆ.சிவசுப்பிரமணியன், பழ.கோமதிநாயகம், மே.து.இராசுகுமார், ஞா.ஸ்டீபன், சுந்தர்காளி, பொ.வேல்சாமி, பெ.மாதையன், இ.முத்தையா, த.தர்மராசு, பிரேம், ஆ.தனஞ்செயன், சூ.கெளதமன், கோ. விசயவேணுகோபால், க.பஞ்சாங்கம் முதலானவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கின்றனர். 

  இடையிடையே இராசா முகமது இன்னிசை பாடுகிறார். நிறைவு விழாவில் திரு.சி.குமாரசாமி அவர்கள் (செயலாளர், கலை, பண்பாட்டுத்துறை, புதுவை அரசு) வாழ்த்தவும் முனைவர் பொற்கோ நிறைவுரை ஆற்றவும் உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முனைவர் மு.சுதர்சனம், முனைவர் பக்தவச்சலபாரதி, முனைவர் இரா.சம்பத் ஆகியோர் செய்துள்ளனர். புதுச்சேரி அறிஞர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: