முனைவர்
மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் நூல்களின் வெளியீடு,
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 03.07.2013 மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற
உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்களும்,
புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச்
சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள்
திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து ஆண்டிராய்டில்
வழங்கும் நிகழ்வும், நடவுப்பாடல்கள் ஒளிவட்டு வெளியீடும், பாவேந்தரின் முதல்பதிப்புகள்
மின்பதிப்புகளாக வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன. தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி இலக்கிய வட்டத்தினர் செய்துள்ளனர்.
செவ்வாய், 2 ஜூலை, 2013
ஞாயிறு, 30 ஜூன், 2013
நடவுப் பாடல்கள் ஒளிவட்டு அறிமுகம்…
அண்மையில்
பொதிகைத் தொலைக்காட்சியில் நடவுப்பாடல்களைப் பாடி அறிமுகம் செய்தேன். தமிழகத்திலும்
கடல் கடந்த நாடுகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இலண்டன், அமெரிக்கா,
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை வாழ் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிவட்டாக மாற்றி வழங்கி
உதவும்படி அன்பு வேண்டுகோள் வைத்தனர். ஒளிவட்டில் இனி இந்த நடவுப்பாடல்கள் கிடைக்கும்.
வரும் அறிவன் கிழமை(புதன்) புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ஒளிவட்டு வெளியிடப்பட
உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுவையின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி(எ) கோதண்டராமன் அவர்களும், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் கலந்துகொண்டு வெளியிட உள்ளனர்.
நாட்டுப்புறப் பாடல்களை ஆர்வமுடன் கேட்கும் நண்பர்களும், தமிழிசை ஆர்வலர்களும் இந்த ஒளிவட்டை வாங்கி என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


