நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வாணியம்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாணியம்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 மே, 2013

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி பன்னாட்டுப் பாவரங்கம்



வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம், இலக்கியா பதிப்பகத்துடன் இணைந்து பாரதி பன்னாட்டுப் பாவரங்கம் என்னும் நிகழ்ச்சியை 09.06.2013, ஏலகிரியில் நடத்துகின்றது. ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கலாம்.

மரபுப்பா, புதுப்பா எதுவாக இருப்பினும் 25 வரிகளுக்கு மிகாமல் படைப்புகள் இருக்க வேண்டும். பேராளர் கட்டணம் 500 உருவா

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

பேராசிரியர் ப.சிவராஜி,
தமிழ்த்துறைத் தலைவர்,
இசுலாமியாக் கல்லூரி,
வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் - 635 752
செல்பேசி: 0091 9095831291
sivarajihodtamil@gmail.com

திங்கள், 4 மார்ச், 2013

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர்கள் சந்திப்பு


இசுலாமியாக் கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும்


பேராசிரியர் க.பிரேம்நசீர்,  தமிழ்த்துறைத் தலைவர் ப.சிவராஜி, எழுத்தாளர் வசந்தநாயகன்

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறையின் அழைப்பின்பேரில் தமிழகத்தின் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலிருந்து தமிழ்ப்பேராசிரியர்கள் இசுலாமியாக் கல்லூரியில் ஒன்றுகூடித் தமிழ்ப் பாடத்திட்டங்கள் குறித்து அண்மையில் கலந்துரையாடினர். நிறைவாகக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் க. பிரேம்நசீர் அவர்களைச் சந்தித்துத் தமிழ்த்துறை வளர்ச்சி குறித்துக் கலந்துரையாடினர்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழா

வாணியம்பாடியில் தமிழ்ப்பணியாற்றிவரும் இலக்கிய அமைப்புகளுள் பாரதி தமிழ்ச்சங்கம் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பின் நான்காம் ஆண்டு ஆண்டு விழா மலர்வெளியீடு, பரிசளிப்பு, பாட்டரங்கம், நாடகம், நூல்வெளியீடு என்று பல நிகழ்வுகளைக் கொண்டு நடைபெற உள்ளது.

நாள்: 11.12.2011 ஞாயிறு
நேரம்: காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை

இடம்: கே.பி.எஸ். மகால், கோட்டை, வாணியம்பாடி

நிகழ்ச்சித் தலைமை: சி.ஸ்ரீதரன்(தொழிலதிபர்)

முன்னிலை: ஜெ.விஜய் இளஞ்செழியன், ஏ.ரியாஸ் அகமது, மு.இராமநாதன்

வரவேற்புரை: இரா.முல்லை

பாட்டரங்கத் தலைமை: முனைவர் கோவை சாரதா

பங்கேற்பு: சுரேந்திரன், அன்பரசு, மலர்விழி

பாரதி வருகிறார் நாடகம் இயக்கம் முனைவர் கி.பார்த்திபராஜா

"விடுதலைக்கு வித்திட்ட வாணியம்பாடிச் செம்மல்கள்"
நூல்வெளியீடு: பேராசிரியர் அப்துல்காதர்

முதற்படி பெறுதல் பாரதி கிருஷ்ணகுமார்

நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன்

நூல்படி பெறுவோர்:
மேனாள் அமைச்சர் ஆர்.வடிவேல்
ஜி.சக்கரவர்த்தி,டி.கே.இராஜா உள்ளிட்டோர்.

அனைவரும் வருக!
அழைத்து மகிழ்வோர்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம்

செவ்வாய், 19 ஜூலை, 2011

பேராசிரியர் ப. சிவராஜி நூல்கள் வெளியீட்டுவிழா


முனைவர் ப.சிவராஜி அவர்கள்

நாள்: 31.07.2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: அல்லாமா இக்பால் அரங்கம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் எழுதிய புலவர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், செந்நாப்புலவர் ஆ. கார்மேகக்கோனார் இலக்கியப்பணிகள் என்னும் நூல்களின் வெளியீட்டு விழா வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் அல்லாமா இக்பால் அரங்கில் 31.07.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புலவர் இரா.இளங்குமரனாரின் தலைமையில் நடைபெறும் விழாவில் ச.வினோத்குமார் வரவேற்புரையாற்றுகின்றார். சி.கெய்சர் அகமது, கனி முகமது ஜாவித், முனைவர் சையத் சாகாபுதீன், முனைவர் பிரேம்நசீர் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதியரசர் த. கிருபாநிதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கரு.அழ.குணசேகரன் ஆகியோர் நூல்களை வெளியிட திரு.வ.கோ. சுந்தரமூர்த்தி இ.ஆ.ப அவர்களும் அரக்கோணம் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சீத்தாராமன் அவர்களும் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

முனைவர் முகமதலி ஜின்னா, பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் சுகேல், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். வாணியம்பாடி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தமிழ்மன்றங்களின் பொறுப்பாளர்கள், அரசியல் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம் நிகழ்வும்-படங்களும்


அரங்கில் முதல்வர்,கல்லூரிச்செயலர்,மு.இளங்கோவன்


ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் இளங்கலைத் தமிழ்ப்பட்ட வகுப்புத் தொடங்கப்பட உள்ளதை உறுதிசெய்தல்


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெறுவதற்கான அழைப்பினைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவராஜி அவர்கள் முன்பே மடல்வழித் தெரிவித்தார்.30.09.2010 இல் நடத்த முதலில் திட்டமிட்டோம்.அன்று நாடு முழுவதும் 144 தடை ஆணை இருந்ததால் எங்கள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 07.10.2010 அன்று நாடத்தலாம் என்று உறுதிசெய்தோம். அதன்படி காலை 10.30 மணிக்குப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பயிலரங்கத் தொடக்கத்தில் நூற்றாண்டுப் பழைமையுடைய இக்கல்லூரியில் பணியாற்றியவர்கள் பலரும் உலக அளவில் புகழ்பெற்ற பேராசியர்களாக விளங்கியதையும்,இக்கல்லூரியில் பயின்றவர்கள் உலக அளவில் புகழ்பெற்றவர்களாக விளங்குவதையும் எடுத்துரைத்து இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலுவதற்கு உரியவகையில் இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் வகுப்பைத் தொடங்க வேண்டும் என்று பணிவுடன் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

கல்லூரியின் முதல்வரும்,கல்லூரியின் துணைச்செயலும் கூடியிருந்த அவையில் இக்கோரிக்கை வைக்கப்பட்டதும் கல்லூரியின் துணைச்செயலர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் மேடையில் தோன்றி அடுத்த ஆண்டு முதல் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப் பட்ட வகுப்பு தொடங்கப்படும் என்ற அறிவிப்பைச் செய்தார்கள்.அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற தமிழ்த்துறையினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் ‘தமிழும் இணையமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மு.இளங்கோவன் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக எடுத்துரைத்தார்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றினார்.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிவுபெற்றனர். இணையத் தமிழன்பர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா


கல்லூரித் துணைச்செயலாளர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள்


பேராசிரியர் சிவராஜி அறிமுக உரை


வினாக்களை எழுப்பி ஐயம் போக்கிக்கொள்ளும் மாணவர்கள்


இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு வர உள்ளதைக் கொண்டாடும் பேராசிரியர்கள்


மு.இளங்கோவன்


அரங்கு நிறைந்த மாணவர்கள்


நன்றியுரை

புதன், 6 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 'தமிழ் இணையம்' அறிமுகவிழா சிறப்புடன் நடைபெற உள்ளது. 07.10.2010(வியாழன்) காலை பத்துமணிக்குத் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இசுலாமியக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா பாஷா அவர்கள் தலைமையில் விழா நடைபெறுகிறது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றுகின்றார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றித் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக மாணவர்களுக்கு விளக்க உள்ளார்.இதில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,புகழ்பெற்ற இணையதளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம் யாவும் அடங்கும்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றுவார்.
இணையத் தமிழின்பம் பருக இசுலாமியக்கல்லூரியின் தமிழ்த்துறையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

தொடர்புக்கு: பேராசிரியர் ப.சிவராஜி 90958 31291