நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் போற்றுகின்றேன்! புதுவை முதலமைச்சர் ந. அரங்கசாமி பேச்சு!





புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் உரையாற்றும் காட்சி

புதுச்சேரியில் நடைபெற்ற 13 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் பாராட்டிப் பேசினார். புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்(19-21.09.2014) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் பல பகுதிகளிலிருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தந்தனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தனர். க் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வுக்கோவையாக வெளியிடப்பட்டது

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில் கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தாம் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதை ஆர்வமுடன் குறிப்பிட்டார். அதிகமாக நான் வெளிநாடு செல்லவில்லை. மலேசியா, சிங்கப்பூர் என இரண்டு நாட்டுக்கு மட்டும் நான் சென்றுள்ளேன். மலேசியாவுக்குச் செல்வது அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்வதற்காகும். மலேசியாவில் ஒரு கடையில் பொருள்களை எடுத்து விலை விசாரித்தபொழுது அங்குப் பணிபுரிந்த பணிப்பெண் நல்ல தமிழில் விலை கூறியதுடன் பொருள்கள் குறித்த விளக்கத்தையும் நல்ல தமிழில் குறிப்பிட்டார். தமிழைத் தூய்மையாகப் பேசுவதில் மலேசியத் தமிழர்கள் சிறப்பாக உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட மலேசியப் பேராளர்கள் வந்தும் அவர்களைச் சந்திக்கமுடியாமல் போனது. எனினும் அடுத்தமுறை மலேசியா செல்லும்பொழுது அவர்களைக் கட்டாயம் சந்தித்துக் கலந்துரையாடுவேன் என்று ஆர்வமுடன் குறிப்பிட்டார்.  

புதுச்சேரி ஆன்மீக பூமி. அறிஞர்கள் நிறைந்த பூமி. இந்த மாநிலம் அளவில் சிறியதாக இருந்தாலும் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் இது முதன்மையானது. இங்குக் கல்வி, தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். புதுச்சேரிக்குப் பன்னாட்டு அறிஞர்கள் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். உத்தமம் என்ற இந்த அமைப்பு உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழை உள்ளிட்டுப் பயன்படுத்த எடுக்கும் முயற்சிக்குப் புதுவை அரசு துணைநிற்கும் என்றார்.

 புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்த முன்வந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமான உத்தமம் அமைப்பையும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படித்த பேராசிரியர்களையும் பாராட்டுகின்றேன் என்றார்.

 புதுவை முதல்வரை வரவேற்று அழைத்துவரும் உத்தமம் பொறுப்பாளர்கள்.

அறிஞர் பெருமக்கள் புதுவை முதலமைச்சர் அவர்களை எழுந்து நின்று வரவேற்றல்.

மாநாட்டு மலரில் முதலமைச்சரின் வாழ்த்துரைப் பகுதியைக் காட்டி மகிழும் மு.இளங்கோவன்

மக்கள் முதல்வருடன் மு.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலன்

உத்தமம் தலைவர் வாசு அரங்கநாதன் முதல்வர் அவர்களைச் சிறப்பித்தல். அருகில் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.


             புதுவை முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை


புதுவை முதல்வர் அவர்களின் உரையைக் கேட்டு மகிழும் உத்தமம் பொறுப்பாளர்கள்.

மக்கள் முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்களின் உரையைக் கேட்கும் மாநாட்டுப் பேராளர்கள்

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் மு.இளங்கோவனிடம் முதல்வர் அவர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி.

 மக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்பும் உத்தமம் மாநாட்டு விழாக்குழுவினர்




செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா




 மக்கள் அரங்கில் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் நிறுவுரையாற்றுதல். அருகில் மு.மணிவண்ணன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், ப.அர. நக்கீரன், மு.இளங்கோவன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 2012, திசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மக்கள் அரங்கின் பொறுப்பாளராக உத்தமம் அமைப்பினர் எனக்கு வாய்ப்பு நல்கினர். நண்பர்களின் துணையுடன் நானும் சிறப்பாக உழைத்து மக்கள் அரங்கைத் திறம்பட நடத்திக் கொடுத்தேன்.

மாநாட்டுக்கு முதல்நாள் இலங்கையிலிருந்து திரு. சரவணபவன் அவர்கள் புதுச்சேரிக்கு வந்தார்கள். இருவரும் பகலுணவுக்குப் பிறகு நம் இல்லத்திலிருந்து மாலையில் சிதம்பரம் புறப்பட்டோம். இரவு எங்களுக்கு உரிய அறை சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர. நக்கீரன் அவர்களுடன் தங்கும் வாய்ப்பு அமைந்தது. மனம் திறந்து உரையாடினோம்.

மலேசியாவிலிருந்து நண்பர் திரு. முனியாண்டி அவர்களும் வந்து இணைந்துகொண்டார். திருச்சியிலிருந்து திரு. மணிகண்டன் அவர்களும் வந்தார். இரவு ஒருசுற்றுப் பேச்சுக்குப் பிறகு அனைவரும் ஓய்வெடுத்தோம்.

காலையில் மாநாட்டுக்கு ஆயத்தமானோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த நண்பர்களைக் கண்டு அளவளாவினோம். மாநாடு காலை 10. 15 மணிக்குப் புதிய அரங்கில் சிறப்பாகத் தொடங்கியது. (இது பற்றி முன்பே பதிந்துள்ளேன்). இரண்டாம் நாள் நிகழ்வில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சிதம்பரம் தலைமையில் திரு. செல்வமுரளி இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி, மின்பலகை பற்றி சிறப்பான அறிமுகவுரையாற்றினார். பலரும் பயன்பெற்றனர். திரு.குணசீலன், திரு.பழனி, திருவள்ளுவன், சிதம்பரம் ஆகியோர் காலை அமர்வில் உரை வழங்கினர்,

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் சேம்சு தலைமையில் பேரா. காமாட்சி, துரையரசன், பேராசிரியர் சுப்பிரமணி, திரு. சையத் ஆகியோர் கட்டுரை வழங்கினர். இதில் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணி அவர்களின் கட்டுரை சமூக வலைத்தளங்கள் குறித்து அமைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. மாலையில் பேராசிரியர் இளம்பரிதி அவர்கள் விக்கிப்பீடியாவில் படங்கள் இணைப்பது குறித்து அறிமுகவுரையாற்றினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் (30.12.2012)  காலை இளம்பரிதி அவர்கள் விக்கிப்பீடியாவில் படம் இணைப்பது குறித்து விரிவான உரையாற்றினார். தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களின் படங்களை இணைந்ததைப் பரிதி விளக்கிப் பேசினார். விக்கியில் தமக்கு அமைந்த பங்களிப்புப் பணிகளை நினைவுகூர்ந்தார்.

பரிதியை அடுத்து தகவல் உழவன் அவர்கள் விக்கிப்பீடியாவிலும் விக்சனரியிலும் சொற்களை இணைப்பது குறித்து விரிவான காட்சி விளக்கம் கொண்டு அமைந்த உரையை வழங்கினார்.

30.12.2012 பகல் 12 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது. கண்காட்சிப் பொறுப்பாளர் வள்ளி ஆனந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மணி. மணிவண்ணன் தலைமையில் நிறைவுவிழா நடைபெற்றது. திரு. அ. இளங்கோவன். முனைவர் ப. அர. நக்கீரன் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ நிறைவுரை வழங்கி ஒவ்வொரு மாநாட்டிலும் மக்கள் அரங்கம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி விரிவான உரை வழங்கினார். நிறைவில் முனைவர் மு.இளங்கோவன் (மக்கள் அரங்கப் பொறுப்பாளர்) நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குத் தினமலர், தினமணி, இந்தியன் எக்சுபிரசு, தினகரன், தினத்தந்தி, விகடன், தட்சு தமிழ், தமிழன் வழிகாட்டி, புதியதலைமுறைத் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, தினத்தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தியை உடனுக்குடன் வெளியிட்டன. அனைத்து ஊடகத்துறை நண்பர்களுக்கும் நன்றி.

மக்கள் அரங்கிற்கு வருகை தந்து தொடங்கிவைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா. இராமநாதன் அவர்களுக்கும், நிறைவு விழாவில் கலந்துகொண்டு நிறைவுரையற்றிய முனைவர் மு. பொன்னவைக்கோ (துணைவேந்தர், எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் நன்றி. அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய அறிஞர் பெருமக்களுக்கும், கட்டுரை வழங்கியவர்களுக்கும்  பார்வையாளர்களாகப் பங்கேற்றவர்களுக்கும் நன்றி. உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் நன்றி.


மக்கள் அரங்கில் கலந்துகொண்ட அறிஞர் பெருமக்கள்



 விக்கி பங்களிப்பாளர் தகவல் உழவன் உரை



பேராசிரியர் தமிழ்ப்பரிதி உரை




பேராசிரியர் க.துரையரசனுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் பேராசிரயர் சேம்சு


மக்கள் அரங்கிற்கு வருகை தந்த அ.க.இராமகிருட்டின்(பெங்களூர்)



மணி.மணிவண்ணன்(தலைவர்,உத்தமம்) மற்றும் குழுவினர்




வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்




முனைவர் மா.இராமநாதன் அவர்கள் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வுக்கட்டுரை மலர் வெளியிடுதலும் முனைவர் செ.வை.சண்முகம் அவர்கள் பெறுதலும்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(28.12.2012) காலை 10.15 மணிக்கு உலகத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அரசர் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி  மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 

மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மா. கணேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணி. மணிவண்ணன் அவர்கள் தலைமையுரையாற்றினார். துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் மாநாட்டின் தொடக்கவுரையாற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தார். மாநாட்டு மலரினைத் துணைவேந்தர் வெளியிட முனைவர் செ.வை.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

திரு.சிவாப்பிள்ளை(இலண்டன்), திரு.மணியம்(சிங்கப்பூர்), திரு.அனுராஜ் (இலங்கை),முனைவர் இல.இராமமூர்த்தி(மைசூர்), திரு.இளந்தமிழ் (மலேசியா) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடக்கவிழாவிற்குப் பிறகு உலகத் தமிழ் இணையமாநாட்டின் கண்காட்சியையும், மக்கள் அரங்கத்தையும் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் திறந்துவைத்தார். திரு.அ.இளங்கோவன், வள்ளி மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொது அமர்வில் அடோபி நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு மோகன் கோபால கிருட்டிணன் அவர்கள் மையக்கருத்துரை வழங்கினார்.  மக்கள் அரங்கில் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையில் முனைவர் மு.இளங்கோவன் கட்டுரை படித்தார். அதனைத் தொடர்ந்து துரை. மணிகண்டன், முனைவர் மு.பழனியப்பன், பேராசிரியர் சீதாலெட்சுமி, திரு. யோகராஜ் ஆகியோர் கட்டுரை வழங்கினர். ஆய்வரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்கினர். 

உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் உள்ளிட்ட அயல்நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி, மக்கள் அரங்கு, ஆய்வரங்கு நாளை(29.12.2012) காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.  


துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றுதல்



உலகத் தமிழ் இணைய மாநாட்டு மேடையில் அறிஞர்கள்



மக்கள் அரங்கிற்கு வருகை தந்த துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்களுடன் மு.இளங்கோவன்,அ.இளங்கோவன், மா.கணேசன், துரை. மணிகண்டன்,  வள்ளி ஆனந்தன், ப.அர.நக்கீரன்




தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையுரை, மு.இளங்கோவன்(கட்டுரையாளர்)


பொறியாளர் வள்ளி ஆனந்தன் அவர்களுடன் மு.இளங்கோவன்

தமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…



தமிழ் இணையமாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று 28.12.2012 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மக்கள் அரங்கத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார். முனைவர் நக்கீரன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். பிற்பகல் உணவுக்குப் பிறகு தமிழ் இணைய அறிமுகம், வலைப்பூ உருவாக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.

சனி, 26 ஜூன், 2010

தமிழ் இணைய மாநாட்டு அரங்கிலிருந்து...


வலைப்பூ ஆர்வலர்கள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்கிலிருந்து சில படங்களை வழங்குகிறேன்.தமிழ் இணைய ஆர்வலர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வலைப்பூ உருவாக்கினேன்.ஆர்வமுடையவர்களைப் படத்தில் காணலாம்.மேலும் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்வுப்படங்களையும், விக்கி,வலைப்பதிவு பற்றிய உரையாடல் தொடர்புடைய படத்தையும் இணைத்துள்ளேன்.


வலைப்பதிவு,விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடலில் மு.இ,பத்ரி,இரவி,தேனி சுப்பிரமணி


அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயா,நாசா அறிவியலாளர் நா.கணேசன்,நான்


அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ,ஆல்பர்ட்டு பெர்னான்டோ,நான்

வியாழன், 24 ஜூன், 2010

தமிழ் இணைய மாநாட்டுக் காட்சிகள்...


மருத்துவர் பூங்கோதை அருணா,அமைச்சர் ஆ.இராசா


முரசு.முத்தெழிலன்


பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் உத்தமத்தினருடன்



பார்வையாளர்கள்


மு.இ,வாசு,கல்யாணசுந்தரம்

புதன், 23 ஜூன், 2010

தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்கின் சில படங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.கண்டு மகிழுங்கள்.

தமிழ் இணைய மாநாட்டு அரங்க முகப்பு


கணித்தமிழ்ச் சங்க அரங்கம்


தமிழ் இணைய அரங்கு


தமிழ் இணையப் பயிற்சிக்குரிய அரங்கு


தமிழ் இணையம் பயிற்சி பெற வாருங்கள்!


தினமலர் அரங்கு


கண்காட்சி அரங்கு


இணையம் சார்ந்த சொற்களின் பட்டியல்




தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற உள்ள அரங்குகளின் பட்டியல்


திருக்குறள் ஒலிப்பதிப்பு அரங்கம்