நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கட்டுரைக் களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைக் களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூன், 2013

முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் நூல்கள் வெளியீட்டு விழா






முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஆண்டிராய்டு இயங்குதளத்தில் உலகப் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்வும், தமிழ்வளர்ச்சிக்கு உதவும் புதிய இணையதளத் தொடக்க விழாவும், பாவேந்தர் நூல்களின் முதல்பதிப்புகளை மின்பதிப்பாக வெளியிடும் நிகழ்வும், புதுச்சேரி இலக்கிய வட்டத் தொடக்க விழாவும் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளன. தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

நாள்: 03.07.2013,அறிவன்(புதன்)கிழமை, நேரம்: மாலை 6.30 – 8.00 மணி.

இடம்  :  புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து: பேராசிரியர் இரா.அகிலா அவர்கள்

வரவேற்பு: திரு. கு. மோகன் அவர்கள் ( புதுச்சேரி இலக்கியவட்டம்)


தலைமை மற்றும் நூல்கள் வெளியீடு:

மாண்புமிகு வ.சபாபதி(எ) கோதண்டராமன்அவர்கள்
(சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை)


நூல்களின் முதல்படி பெறுதல்:

முனைவர் வி.முத்து அவர்கள் தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

திரு. ப. வைத்தியநாதன் அவர்கள் (உதவிப் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)

திரு. சோழன் க.குமார் அவர்கள், சென்னை

இணையதளத்தைத் தொடங்கி வைத்தல், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஆண்டிராய்டில் அறிமுகம், பாவேந்தரின் மின்பதிப்புநூல்கள் வெளியிடல்

மாண்புமிகு தி.தியாகராசன்  அவர்கள்
 (மின்துறை, கல்வி மற்றும் கலைபண்பாட்டுத்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு)

நூல்கள் மதிப்பீட்டு உரை:  பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் அவர்கள்


வாழ்த்துரை

தமிழ்மாமணி திரு. மன்னர்மன்னன் அவர்கள்

முனைவர் சு.வரலட்சுமி அவர்கள் ( முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி)

முனைவர் அரங்க. பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

நன்றியுரை: திரு. கோ. முருகன் அவர்கள் (செயலர், புதுச்சேரி இலக்கியவட்டம்)

தொகுப்புரை: முனைவர் ஆ. மணி அவர்கள் (தமிழ்த்துறை, தாகூர் கலைக் கல்லூரி) 


- நிகழ்ச்சி ஏற்பாடு:  புதுச்சேரி இலக்கிய வட்டம்


தொடர்புக்கு: 94420 29053 / 94439 27141 / 98423 30358

ஞாயிறு, 9 ஜூன், 2013

முனைவர் மு.இளங்கோவன் நூல்கள் மலேசியாவில் வெளியீடு - படங்கள்


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் நூல்களை வெளியிட, திரு.மாரியப்பன் ஆறுமுகம் முதற்படிகளைப் பெற்றுக்கொள்ளுதல். அருகில் நூலாசிரியர் மு.இளங்கோவன், திரு.மன்னர்மன்னன், முனைவர் கி.கருணாகரன், முனைவர் செ.சண்முகம், முனைவர் ந.தெய்வசுந்தரம்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் - பெட்டாலிங் செயா தமிழ் இளைஞர் மணி மன்றமும், மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றமும் இணைந்து முனைவர் மு.இளங்கோவன் எழுதிய செவ்விலக்கியச் சிந்தனைகள், கட்டுரைக் களஞ்சியம் என்னும் இரு நூல்களையும் மலேசியாவில் 07.06.2013 (வெள்ளிக்கிழமை) மாலையில் பெட்டாலிங் செயா நகராண்மைக் கழக நூலக அரங்கில் வெளியிட்டன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு. பெ. இராசேந்திரன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நூல்களை வெளியிட்டார். தமிழ்த்தொண்டர் திரு.மாரியப்பன் ஆறுமுகம் அவர்கள் நூலின் முதற்படிகளைப் பெற்றுக்கொண்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன், முனைவர் ந.தெய்வசுந்தரம் (மேனாள் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் செ.சண்முகம் (மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கழகம்), முனைவர் சத்தியமூர்த்தி (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மலேயாப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் திரு.மன்னர்மன்னன் அவர்கள், ஆசிரியர் திரு.ம.முனியாண்டி, பொறியாளர் பெருமாள், பொறியாளர் இளஞ்செழியன், நாடக அறிஞர் திரு. முருகன், சி.ம.இளந்தமிழ், அருள்முனைவர் உள்ளிட்ட மலேசியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மலேயாப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பலரும் திரளாக வந்திருந்தனர். முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை வழங்கினார்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு. இரா. சரவணன், திரு. இரா. செல்வசோதி. திரு. நவராசன் ஆகியோர் செய்திருந்தனர்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

விழா மேடையில் அறிஞர்கள்

மலேசியத் தமிழ்ப் பற்றாளர்கள்

மலேயாப் பல்கலைக்கழக மாணவர்கள்

முனைவர் கி.கருணாகரன் வாழ்த்துரை

திரு.பெ.இராசேந்திரன் தலைமையுரை

முனைவர் ந.தெய்வசுந்தரம் வாழ்த்துரை

முனைவர் செ. சண்முகம் திறனாய்வுரை

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நூலாசிரியரைச் சிறப்பித்தல்

மலேசிய நாடக அறிஞர் திரு.முருகன் அவர்கள் நூல்படிகளைப் பெறுதல்
மு.இளங்கோவன் திரு.மன்னர்மன்னன் அவர்களுக்கு நூல்படிகளை அளித்தல்

திரு. ம.முனியாண்டி அவர்களுக்கு நூலாசிரியர் நூல்களை வழங்குதல்

முனைவர் மு. இளங்கோவன் ஏற்புரை

புதன், 29 மே, 2013

புதிய வரவுகள்…






முனைவர் மு.இளங்கோவன் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் என்னும் பெயரில் நூலாக வெளிவர உள்ளது. இரு நூல்களையும் வயல்வெளிப் பதிப்பகம் வெளியிடுகின்றது.

2013, சூன் திங்கள் 7 ஆம் நாள் ( வெள்ளிக்கிழமை மாலை ) நூல்களின் வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சார்பில் நடைபெற உள்ளது. மலேசியாவின் இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், எழுத்தாளர்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் பணியாற்றும் திரு. மன்னர்மன்னன் அவர்களும், திரு. செல்வசோதி அவர்களும் ஆசிரியர் திரு. ம.முனியாண்டி அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.