நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வெள்ளைநிற மல்லிகையோ...!


விபுலாநந்த அடிகளார் எழுதிய "வெள்ளைநிற மல்லிகையோ..." எனத் தொடங்கும் பாடல் இறையீடுபாடு கொண்ட அன்பர்களின் பார்வையில் ஓர் அறிவார்ந்த பாடலாகப் போற்றிப் பாடப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் அந்தப் பாடலை அறியாதவர்கள் மிகவும் குறைவு; இல்லை என்றே சொல்லலாம். அத்தகு பெருமைக்குரிய மக்கள் பாடலை விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படத்திற்காக இசையமைத்து, இணையத்தில் வெளியிட்டோம். பல்லாயிரம் அன்பர்கள் கேட்டு மகிழ்ந்ததுடன் எங்கள் முயற்சியை நல்லுள்ளம்கொண்டோர் பாராட்டி ஊக்கப்படுத்தினர். அதனைக் காட்சிப்படுத்திப் பார்க்க நினைத்தோம். எங்களின் ஆவணப்படத்திற்காக நாட்டியக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகக் காட்சிப்படுத்தினோம். இன்னும் சில நாள்களில் அந்தப் பாடல் உலகத் தமிழர்களின் கண்ணையும் கருத்தையும் கவர உள்ளது. பாடல் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றோம்.


படங்கள் உதவி: நாராயணசங்கர்

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்கள் அழகு ஐயா
தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது
ஆவணப் படத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பாடல் காட்சிகள் கண்ணுக்கும் இதயத்திற்கும் சுகத்தைத் தருகின்றன.