அன்புடையீர்! வணக்கம்.
தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப்
பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம்
தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின்
சார்பில் அறிஞர்களின்
பங்கேற்பில் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம்
பருகவும் அன்புடன்
அழைக்கின்றோம்.
நாள்: 02.03.2017, வியாழக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
இடம்: செகா கலைக்கூடம், 119, நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
தலைமை: ஆய்வறிஞர் கு.சிவமணி அவர்கள்
சிறப்புரை: முனைவர் இராச.
திருமாவளவன்
அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியச் சிக்கல்கள்
நன்றியுரை: முனைவர் இரா. கோவலன்
அவர்கள்
அனைவரும் வருக!
அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003
தொடர்புகொள்ள:
முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / முனைவர் மு.இளங்கோவன் + 9442029053
1 கருத்து:
தொடர்பொழிவு அழைப்பிதழ் கண்டேன். பொழிவு சிறக்க வாழ்த்துகள்.
கருத்துரையிடுக