தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ.
சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் வழங்கப்படும் கரிகாற்சோழன் விருதுகள் பெறும்
தகுதியாளர்களை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும்
இவ்விருதுக்குச் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் படைப்புகள் வரவேற்கப்பட்டுத்
தகுதியான படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் கரிகாற்சோழன் விருது வழங்குவது வழக்கம்.
இந்த
ஆண்டு முதல் கூடுதலாக இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர் ஒருவருக்கும் இவ்விருது
சேர்த்து வழங்கப்படும் என முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு எம்.ஏ.
முஸ்தபா அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி
முடிவுகள்:
1. மலேசியாவுக்கு
வழங்கப்படும் விருது மறைந்த திரு. செ. சீனி நைனா முகம்மது எழுதிய தொல்காப்பியக் கடலின் ஒரு துளி கட்டுரைக்கும்,
2. சிங்கப்பூர்
எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் எழுதிய மாறிலிகள் சிறுகதைக்கும்,
3. இலங்கையைச்
சேர்ந்த திரு. மு. சிவலிங்கம் அவர்கள் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை என்ற
புதினத்துக்கும் வழங்கப்படுகிறது.
குறிப்பு:
விருது வழங்கப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.
முஸ்தபா
தமிழ் அறக்கட்டளை
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக