மருத்துவர்
சு. நரேந்திரன் அவர்கள் மருத்துவச் செய்திகளைத் தமிழில் எழுதுவதிலும், தமிழ்வழியில்
கற்பிப்பதிலும் முன்னோடி மருத்துவர் ஆவார். தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப்
பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அறுவை மருத்துவத்தில்
முதுநிலைப்பட்டம் (எம்.எஸ்) பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில்
“கல்லீரல் அமீபா சீழ்க்கட்டியினால் நேரும் இறப்பு விழுக்காடு
கட்டுப்பாடு” என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம்
பெற்றவர்.
நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்து ஆய்வுமாணவனாக இருந்தபொழுது பேராசிரியர் சி. தங்கமுத்து ஐயா அவர்கள் ( பதிவாளராகவும், துணைவேந்தராகவும் பணியாற்றியவர்) நம் மருத்துவர் அவர்களை அறிமுகம் செய்தார்கள். அன்று முதல் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் மருத்துவப்புலமையை அறிந்து அவர் நூல்களையும் கட்டுரைகளையும் படித்துள்ளேன். அவர்தம் வாழ்வையும் பணிகளையும் பதிந்துவைப்பதில் மகிழ்கின்றேன்.
மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் புதுக்கோட்டையில் வாழ்ந்த திரு பழ. சுந்தரேசன் அவர்கள், திருவாட்டி சு. பத்மாசினி ஆகியோரின் அருமைப் புதல்வராக 09. 11. 1942 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னையிலும் நிறைவு செய்தவர். தஞ்சையில் மருத்துவப் படிப்பை முடித்தவர். தஞ்சைப் புட்பம் கல்லூரியில் பதிவு செய்துகொண்டு, புதுவை சிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் திரு. பாரிஜா என்னும் நுண்ணுயிரியல் துறை அறிஞரின் மேற்பார்வையில் மருத்துவத்துறையில் முனைவர்பட்ட ஆய்வை முடித்தவர். இவர் தம் பணிகளையும், வாழ்வியலையும் கீழ்வரும் வகையில் பட்டியலிடலாம்.
நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்து ஆய்வுமாணவனாக இருந்தபொழுது பேராசிரியர் சி. தங்கமுத்து ஐயா அவர்கள் ( பதிவாளராகவும், துணைவேந்தராகவும் பணியாற்றியவர்) நம் மருத்துவர் அவர்களை அறிமுகம் செய்தார்கள். அன்று முதல் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் மருத்துவப்புலமையை அறிந்து அவர் நூல்களையும் கட்டுரைகளையும் படித்துள்ளேன். அவர்தம் வாழ்வையும் பணிகளையும் பதிந்துவைப்பதில் மகிழ்கின்றேன்.
மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் புதுக்கோட்டையில் வாழ்ந்த திரு பழ. சுந்தரேசன் அவர்கள், திருவாட்டி சு. பத்மாசினி ஆகியோரின் அருமைப் புதல்வராக 09. 11. 1942 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னையிலும் நிறைவு செய்தவர். தஞ்சையில் மருத்துவப் படிப்பை முடித்தவர். தஞ்சைப் புட்பம் கல்லூரியில் பதிவு செய்துகொண்டு, புதுவை சிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் திரு. பாரிஜா என்னும் நுண்ணுயிரியல் துறை அறிஞரின் மேற்பார்வையில் மருத்துவத்துறையில் முனைவர்பட்ட ஆய்வை முடித்தவர். இவர் தம் பணிகளையும், வாழ்வியலையும் கீழ்வரும் வகையில் பட்டியலிடலாம்.
மருத்துவப்பணி :
·
சிறப்பு
நிலைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்
பல்கலைக்கழகம்
·
பேராசிரியர்,
பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரி, திருச்சி
·
பேராசிரியர்
- அறுவை சிகிச்சை, தஞ்சை மருத்துவக்கல்லூரி, 1994 - 2000
·
உதவி
அறுவை சிகிச்சை பேராசிரியர், தஞ்சை மருத்துவக்கல்லூரி, 1993 - 1997
·
உதவி
மருத்துவர், இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, தஞ்சை,
1970 - 1977
1970
- 2000 வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் மருத்துவக்கல்லூரியில் இவர் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ததுடன் பலநூறு மருத்துவ மாணவர்
- செவிலியர்களுக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்துள்ளார்.
நிறைவு
செய்யப்பட்ட மருத்துவ ஆய்வுத் திட்டங்கள்:
1. தமிழ்நாடு
அரசு அறிவியல் ஆய்வுக்குழுவின் உதவியுடன் 1980 - 1990 வரை 8 திட்டங்கள்
2. அமீபா
கல்லீரல் அழற்சி சார்ந்த ஆய்வு
6
3. தொழுநோயாளிகளுக்குத் தோன்றும் குடல் நோய்கள், சிறுகுடல் அடைப்பு- 2
3. தொழுநோயாளிகளுக்குத் தோன்றும் குடல் நோய்கள், சிறுகுடல் அடைப்பு- 2
ஆ. தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பொறி மையத்துடன் இணைந்த திட்டங்கள் - 4
1. குடல்
அடைப்பு - 1
2. இதய
தாக்கம் - 2
3.
அரிய
உலோகங்கள் - 1
தேசிய
அளவில்
படித்தளிக்கப்பட்ட
மருத்துவ
ஆய்வுக்
கட்டுரைகள்
1. இந்திய
இரைப்பை குடல்நோய்க் கழகம் - மாநாடு - 9
2. இந்திய
அறுவை சிகிச்சை கழகம் - மாநாடு - 2
3. தமிழ்நாடு
கிளை இந்திய அறுவை சிகிச்சைக்
கழகம் மாநாடு - 9
4. தமிழ்நாடு
கிளை இந்திய மருத்துவக் கழகம்
மாநாடு - 2
தேசிய
மருத்துவ
சஞ்சிகைகளில்
வெளிவந்த
கட்டுரைகள்
- 6
இரைப்பை குடல் உள்நோக்கி
பயிற்சியில் இந்திய அளவில் கலந்துகொண்டது
- 4
மருத்துவச் சொற்பொழிவுகள் - 130
தேர்வு
ஆய்வுக்குழு உறுப்பினர்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்,
சென்னை
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி,
சென்னை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
ஆ. முனைவர்
பட்டத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
பெற்ற விருதுகள்
1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
வெளியிட்ட ‘பொது அறுவை மருத்துவம்’
நூலுக்கு 1996ஆம் ஆண்டுக்கான தமிழக
அரசு விருது வழங்கப்பெற்றது (முதல்
பரிசு).
2.பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட ‘வயிற்று நோய்களும் அவற்றின்
மருத்துவமும்’ நூலுக்கு 1991ஆம் ஆண்டுக்கான தமிழக
அரசு விருது வழங்கப்பெற்றது (முதல்
பரிசு).
3. வி.ஜி.பி.
சந்தனம்மாள் அறக்கட்டளை சிறந்த மருத்துவ இலக்கியப்
படைப்பிற்கான பரிசு 1991.
4. மருத்துவ ஆராய்ச்சி, சமூக நல மேம்பாட்டிற்கான
தமிழ்நாடு பிரிவு இந்திய மருத்துவக்
கழகச் சிறப்பு விருது 1995.
5. ஏழாவது தமிழக அறிவியல்
பேரவை சார்பில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயும் மருத்துவமும் எனும் புத்தகத்திற்குச் சிறப்புப்
பரிசு 1998.
6. ‘பெண்ணே உனக்காக’ எனும்
புத்தகத்திற்கு இணையாசிரியர் சிறப்புப் பரிசு, தமிழ் வளர்ச்சிக்
கழகம், தமிழக அரசு 1998.
7. தஞ்சை அரிமா சங்கம்,
சிறந்த மருத்துவ ஆய்வறிஞர் பரிசு 1999.
8. தஞ்சை தமிழிசை மன்றம்,
சிறந்த மருத்துவர் - சமூகநல மேம்பாடு பரிசு
1999.
9. தஞ்சை மருத்துவக்கல்லூரி, சிறந்த
பேராசிரியர் விருது 1999
10. அண்ணா அறக்கட்டளை, மருத்துவக்
களஞ்சியம் முதல் பரிசு ரூ.
5000/-
11. தமிழ்நாடு பிரிவு இந்திய மருத்துவக்
கழகம், டாக்டர் பானுமதி முருகநாதன்
அறக்கட்டளை, தமிழ் மேம்பாட்டிற்கான விருது,
ஈரோடு, 2002.
12. இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
மன்றம், 34ஆம் ஆண்டு அறிவியல்
தமிழ் பரப்பும் நோக்கத்திற்கான விருது, தஞ்சாவூர், 2003.
13. ஜேசிஸ், தஞ்சாவூர், சிறந்த
மூத்த குடிமகன், 2003.
14.அகில இந்திய திராவிட
மொழியியல் 32வது மாநாட்டில் என்.டி.ஆர். அறக்கட்டளை,
‘புதிய மருத்துவ முன்னேற்றமும் கண்டுபிடிப்புகளும்’ என்ற நூலுக்கான விருது,
வாரங்கல், ஆந்திரா, 2004.
15. தஞ்சை காவேரி கலைமன்றம்,
‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’, 2004.
16. சிறந்த மருத்துவர் விருது,
பி.சி.ராய் நாள்
விருது, இந்திய மருத்துவக் கழகம்,
திருச்சி, 2005.
17. மருத்துவத் தமிழ் மேம்பாட்டிற்கான விருது,
அகில உலக மருத்துவத் தமிழ்
ஆய்வு மாநாடு, பழநி, 2005.
18. உலகத்தமிழ் எழுத்தாளர் மன்றம், கவிமாமணி டாக்டர்
ரெ. முத்துகணேசனார் பவள விழா தமிழ்
அறக்கட்டளை, சிறந்த நூலுக்கான பொற்கிழி
பரிசு, 2006.
19. தூய வளனார் தன்னாட்சி
கல்லூரி, அறிவியல் தமிழ் கணினி பயன்பாடு
தேசியக் கருத்தரங்கம், அறிவியல் தமிழறிஞர் விருது, 2006.
20. திருச்சி, இந்திய மருத்துவக் கழகம்,
மரு. பழனியாண்டி அறக்கட்டளை, சிறந்த தமிழறிஞர் விருது,
திருச்சி, 2010.
21. விடுதலை 75ஆம் ஆண்டு அறிவியல்
தமிழ் அறிஞர்க்கான பாராட்டு, தஞ்சை, 2000.
22. ‘கலைமாமணி’ 2010ஆம் ஆண்டுக்கான தமிழக
அரசு விருது - தமிழக முதல்வர் மாண்புமிகு
மு. கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது.
23. தமிழ் மக்கள் கலைவிழா,
கபிஸ்தலம், ‘ஆற்றலாளர் விருது’, 2011.
24. உலக செஞ்சிலுவை சங்க
நாள் விழா, இந்திய செஞ்சிலுவைச்
சங்கம், சிறந்த சமூக மருத்துவ
சேவைக்கான விருது, 2011
நூல்
ஆசிரியர்
- மருத்துவப்
பாடத்திற்கான
நூல்கள்
1. பொது அறுவை மருத்துவம்
(முதல் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. பொது அறுவை மருத்துவம்
(இரைப்பை குடல்) (இரண்டாம் தொகுதி),
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
3. பொது அறுவை மருத்துவம்
(நரம்பு மண்டலம்) (மூன்றாம் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
(அச்சில்)
4. விபத்து, நச்சு இயல் (ஆங்கில
நூல் (மூன்று தொகுதிகள்), அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், சிதம்பரம்.
பொதுமக்களுக்கான
மருத்துவ
நூல்கள்
1. குடற்புண்ணைக் குணப்படுத்தலாம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. நோயை வெல்வோம், என்.சி.பி.எச்.,
சென்னை.
3. 15
வியாதிகளும் அவற்றின் வைத்தியமும், ஸ்டார் பிரசுரம், சென்னை.
4. பெருங்குடல் வாய் திறப்பு, ஆஸ்டமி
அசோசியேஷன் ஆப் இந்தியா, மும்பை
5. உங்களுக்கு தலைவலியா?, பூம்புகார் பிரசுரம், சென்னை.
6. மார்பக நோய்கள், பிரியா
பதிப்பகம், தஞ்சாவூர்.
7.வயிற்று நோய்களும் அவற்றின்
மருத்துவமும், பூம்புகார் பிரசுரம், சென்னை.
8. நீரிழிவு நோயும் அவற்றின் மருத்துவமும்,
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
9. புற்றுநோயும் மருத்துவமும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
10. இதய நோயும் மருத்துவமும்,
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
11. பெண்ணே உனக்காக, பூம்புகார்
பிரசுரம், சென்னை.
12. நலவாழ்வு நம் கையில், கற்பகம்
புத்தகாலயம், சென்னை.
13.புதிய மருத்துவ முன்னேற்றமும்
கண்டுபிடிப்புகளும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
14. சிறுநீரக நோயும் மருத்துவமும், கற்பகம்
புத்தகாலயம், சென்னை.
15. மஞ்சட்காமாலை, கற்பகம் புத்தகாலயம், சென்னை.
16. குழந்தை அறுவை மருத்துவம்,
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
17.கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
18. நோயின்றி வாழ உணவே மருந்து,
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
19.நீரிழிவு நோய் முதல் புற்றுநோய்வரை
உணவு மருத்துவம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
20.இதயநோய் முதல் செரிமான
நோய் வரை உணவு மருத்துவம்,
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
21.உடல், திசு உறுப்புக்கொடை,
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
22. உடல், திசு, உறுப்பு
இரத்ததானம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
23. கிறித்துவமும், அறிவியலும் (அச்சில்)
களஞ்சியம்
1. மருத்துவக் களஞ்சியம், புற்றுநோய் (8ஆம் தொகுதி), தமிழ்
வளர்ச்சிக் கழகம், சென்னை.
2. மருத்துவக் களஞ்சியம், சிறுநீரகம் இனவள உறுப்பு (10ஆம்
தொகுதி), தமிழ் வளர்ச்சிக் கழகம்,
சென்னை.
ஆய்வு நூல்கள்
1. தமிழில்
மருத்துவ இதழ்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை.
2. தமிழ்வழிக்கல்வி
ஒரு கானல் நீரா?, கற்பகம்
புத்தகாலயம், சென்னை.
3. அறிவியல்
தமிழ் (மருத்துவத் தமிழ் வரலாறும் வளர்ச்சியும்),
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
நூல் தொகுப்பாசிரியர்
1. புகழ்பெற்ற
டாக்டர்களின் மருத்துவ ஆலோசனைகள், வாசன் பதிப்பகம், சென்னை.
2. வளர்தமிழ்
அறிவியல், தமிழக அறிவியல் பேரவை,
காரைக்குடி.
3. மருத்துவ
மலர், மக்கள் இயக்கம், கரந்தை,
தஞ்சாவூர்.
4. வளர்தமிழ்,
அகில இந்திய அறிவியல் கழகம்,
தஞ்சாவூர்.
பிற நூல்களில் வெளிவந்த
மருத்துவக்
கட்டுரைகள்
1. அறிவியல்
களஞ்சியம் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) - 25 கட்டுரைகள்
2. ஓய்வு
பெற்ற தென்னக இரயில்வே ஊழியர்கள்
மாநாடு மலர் - 1985
3. இரத்ததான
நாள், நூல், தஞ்சை மருத்துவக்கல்லூரி,
1985
4. தமிழ்க்கலை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1, 1984.
5. நியூ
ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் (அமெரிக்கா)
ஆண்டு மலர் - 1997.
6. தினமணி
ஆண்டு மலர், மருத்துவம், 2000.
7. பன்னாட்டு
தமிழுறவும் கழகம், 4வது உலக
மாநாடு, 2000.
8. கரந்தை,
உமாமகேஸ்வர மேனிலைப்பள்ளி, பொன்விழா மலர், 2002.
9. நிலா,
காலாண்டிதழ், 2003.
10. புரோபஸ்
கிளப், தஞ்சாவூர், 1990
11. தமிழியல்
ஆய்வுகள், டாக்டர் இராம. சுந்தரம்
ஆய்வு மலர், 1999.
12. மொழி
முகங்கள், பேராசிரியர் அரங்கன் மணிவிழா மலர்,
2003.
13. Medical Heritage of Tamilnadu, Periyar College of Pharmacy, Trichy, 2008
நுண்ணாய்வு செய்த
நூல்கள்
1. துணை
செவிலியர் கையேடு, தமிழ் வளர்ச்சித்துறை,
சென்னை, 1985
2. தென்னிந்திய
மருத்துவ வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை, 2004.
இதழ்களில் வெளிவந்த
கட்டுரைகள்
நாளிதழ்கள்
1. தமிழ்முரசு, சிங்கப்பூர் - 30
2. தினமணி - 5
3. மாலைமுரசு - 1
4. தினகரன் - 7
5. தினத்தந்தி - 11
வார
இதழ்
1. ராணி - 5
மாத
இதழ்கள்
1. உண்மை - 4
2. மருத்துவ அறிவியல் மலர் - 2
3. உங்கள் நலம் - 1
4. உங்கள் ஆரோக்கியம் - 1
5. ஆரோக்கியா - 1
6. ஹெல்த் - பியூட்டி - 9
7. அறிக அறிவியல் - 64
8. நல்வழி - 140
9. கலைக்கதிர் - 20
10. சிந்தனையாளன் - 10
11. பெரியார் இயக்கம் - 2
12. தாமரை - 3
13. விஞ்ஞானச்சுடர் - 21
14. மருத்துவ மலர் - 5
15. கோகுலம் கதிர் - 1
16. பேமிலி ஹெல்த் - 1
17. அறிவியல் ஒளி - 17
18. இமைகள் - 3
19. இனிப்பு மலர் - 1
20. எங்களுக்கு மகிழ்ச்சி - 1
காலாண்டிதழ்
1. களஞ்சியம் - 7
ஆண்டுமலர்
1. தினமணி ஆண்டு மருத்துவ
மலர் - 1
பிற
1. திருக்குறள் பேரவை மாநாட்டு மலர் - 1
அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
1. ஏசுதாசன் அறக்கட்டளை, அறிவியல் தமிழ், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
2002.
2. டாக்டர் சிவந்தி ஆதித்தன்
அறக்கட்டளை, தமிழில் மருத்துவ இதழ்கள்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
3. முனைவர் சாமிமுத்து அறக்கட்டளை,
மருத்துவத் தமிழ் வளர்ச்சியும், வரலாறும்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2004.
4. அன்னபூரணி இராமநாதன் அறக்கட்டளை, மருத்துவத் தமிழ் அறிஞர்கள், தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008.
ஆய்வுக்கட்டுரைகள் மற்றும்
உரைகள்
1. தேசிய அளவிலும் மாநில
அளவிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பொது அறுவை மற்றும்
இரைப்பை குடல் நோய் தொடர்பாக
32 கட்டுரைகள் படித்தளிக்கப் பட்டுள்ளன.
2. அறிவியல் தமிழ் தொடர்பாக 20 கட்டுரைகள்
படித்தளிக்கப்பட்டுள்ளன.
3. அகில இந்திய வானொலி
மற்றும் வெரித்தாஸ் (மணிலா) ஒலிபரப்புகளில் 40 உரைகள்
மற்றும் பேட்டிகள்
4. ஆறாவது உலகத்தமிழ் மாநாடு,
மொழியியல் கட்டுரை - 1
5. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு, மொழியியல் கட்டுரை
- 1
தொலைக்காட்சிப் பேட்டி
சன், ராஜ், தூர்தர்ஷன்
தொலைக்காட்சிப் பேட்டி
தினமணி, தினகரன், தினத்தந்தி,
மாலைமுரசு மற்றும் தமிழ்முரசு (சிங்கப்பூர்)
ஆகிய நாளிதழ்களிலும், கலைக்கதிர், நல்வழி, அறிக அறிவியல்,
களஞ்சியம், தாமரை, விஞ்ஞானச்சுடர், ராணி,
அறிவியல் ஒளி ஆகிய இதழ்களிலும்
வெளியான மருத்துவக் கட்டுரைகள் - 375.
சிறப்புப் பொறுப்பாளர்
1. திட்டக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000 - 2003.
1. திட்டக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000 - 2003.
2. கட்டிடக்குழு உறுப்பினர், தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000 - 2004.
3. சிறப்பு ஆய்வாளர், கலைக்களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
1990 - 1995.
4. ஆசிரியர் குழு உறுப்பினர், நல்வழி மாத இதழ்,
1992 - 1995.
5. கௌரவ ஆசிரியர், ஹெல்த் பியூட்டி மருத்துவ இதழ்,
சென்னை.
6. பாடத்திட்டக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
1. அறிவியல் தமிழ், 1989 - 1992
2. பண்டைய அறிவியல், 1989 - 1995
3. சித்த மருத்துவம், 1996 - 1999
7. அகில இந்திய அறிவியல் கழகப் பொருளாளர், தஞ்சாவூர்.
8. நகைச்சுவை மாமன்றம், தலைவர், தஞ்சாவூர்.
9. தமிழய்யா கல்விக்கழகம், மதிப்பியல் தலைவர், திருவையாறு
10. ஸ்டெல்லாமேரி பள்ளி, இயக்குநர், அம்மாபேட்டை
11. தஞ்சை மாவட்ட மனிதவள மேம்பாட்டுக்
கழகம், தலைவர், தஞ்சாவூர்.
12. தமிழ்மன்றம் மாணவர் ஆலோசகர், தஞ்சாவூர்
மருத்துவக்கல்லூரி1995 - 2000.
13. அகில இந்திய அறுவை மருத்துவர் கழகம், தமிழகப் பொருளாளர், 1983 - 1985.
14. இந்திய பொது நிர்வாகவியல் கழகம்,
வாழ்நாள் உறுப்பினர், தஞ்சாவூர்.
15. செஞ்சிலுவைச் சங்கம், வாழ்நாள் உறுப்பினர், தஞ்சாவூர்..
குறிக்கத்தக்க பணி
1.
இலவச
மருத்துவ முகாம்கள் நோயாளிகளை சோதனை செய்து, மருத்துவ
விளக்கச் சொற்பொழிவுகள் - 13
2. மனிதவள
மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவராக இருந்து தொடர்ந்து
தன்னம்பிக்கை, சுய முன்னேற்றத்திற்கான கூட்டங்கள்
- 30
3. 6 ஆண்டுகளுக்கும்
மேலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம்
திங்கட்கிழமை மாலை பொதுமக்களுக்கான மருத்துவச்
சொற்பொழிவுகளைத் தமிழில் நடத்தியது.
ஆர்வமுள்ள பணி
மற்றும்
குறிக்கோள்
1.
எளிய
தமிழில் அறிவியல் கருத்துக்களைப் பரப்பல்
2. பாமர
மக்களுக்கு எளிய தமிழ் வழி
அறிவியல் அறிவைத் தூண்டுவது, வளர்ப்பது
மற்றும் மக்கள் நலம்.
பட்டங்கள்
1. குறள்நெறிச்
செல்வர், உலகத் திருக்குறள் பேரவை,
தஞ்சாவூர். 29.01.1989
2. தமிழ்ப்பணிச்
செம்மல், ஐந்தாவது உலக மாநாடு, பன்னாட்டு
தமிழுறவுக் கழகம், மதுரை, 05.05.2002
3. மருத்துவத்
தமிழ்ச் செம்மல், அகில உலக மருத்துவத்தமிழ்
மாநாடு, பழனி, 2005.
4. மருத்துவச்
சாதனைச்சுடர், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, 2006.
5. மனிதநேய
செந்தமிழ்ச் சுடர், உலகத்தமிழ்க்கவிஞர் பேரவை,
தஞ்சாவூர், 2011.
மருத்துவரின்
முகவரி : 623, கீழராஜவீதி,
தஞ்சாவூர் - 613 001.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக