மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் நூல்களை வெளியிட, திரு.மாரியப்பன் ஆறுமுகம் முதற்படிகளைப் பெற்றுக்கொள்ளுதல். அருகில் நூலாசிரியர் மு.இளங்கோவன், திரு.மன்னர்மன்னன், முனைவர் கி.கருணாகரன், முனைவர் செ.சண்முகம், முனைவர் ந.தெய்வசுந்தரம்
மலேசியாவின்
தலைநகர் கோலாலம்பூர் - பெட்டாலிங் செயா தமிழ் இளைஞர் மணி மன்றமும், மலேசியத் தமிழ்ப்
பேச்சாளர் மன்றமும் இணைந்து முனைவர் மு.இளங்கோவன் எழுதிய செவ்விலக்கியச் சிந்தனைகள்,
கட்டுரைக் களஞ்சியம் என்னும் இரு நூல்களையும் மலேசியாவில் 07.06.2013 (வெள்ளிக்கிழமை)
மாலையில் பெட்டாலிங் செயா நகராண்மைக் கழக நூலக அரங்கில் வெளியிட்டன.
மலேசியத்
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு. பெ. இராசேந்திரன் அவர்கள் நிகழ்ச்சிக்குத்
தலைமை தாங்கி நூல்களை வெளியிட்டார். தமிழ்த்தொண்டர் திரு.மாரியப்பன் ஆறுமுகம் அவர்கள்
நூலின் முதற்படிகளைப் பெற்றுக்கொண்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்
முனைவர் கி. கருணாகரன், முனைவர் ந.தெய்வசுந்தரம் (மேனாள் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்),
முனைவர் செ.சண்முகம் (மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கழகம்), முனைவர் சத்தியமூர்த்தி
(மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மலேயாப்
பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் திரு.மன்னர்மன்னன் அவர்கள், ஆசிரியர்
திரு.ம.முனியாண்டி, பொறியாளர் பெருமாள், பொறியாளர் இளஞ்செழியன், நாடக அறிஞர் திரு. முருகன், சி.ம.இளந்தமிழ், அருள்முனைவர் உள்ளிட்ட மலேசியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மலேயாப் பல்கலைக்கழகத்தின்
மாணவர்கள் பலரும் திரளாக வந்திருந்தனர். முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை திரு. இரா. சரவணன், திரு. இரா. செல்வசோதி. திரு. நவராசன் ஆகியோர் செய்திருந்தனர்.
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்
விழா மேடையில் அறிஞர்கள்
மலேசியத் தமிழ்ப் பற்றாளர்கள்
மலேயாப் பல்கலைக்கழக மாணவர்கள்
முனைவர் கி.கருணாகரன் வாழ்த்துரை
திரு.பெ.இராசேந்திரன் தலைமையுரை
முனைவர் செ. சண்முகம் திறனாய்வுரை
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நூலாசிரியரைச் சிறப்பித்தல்
மலேசிய நாடக அறிஞர் திரு.முருகன் அவர்கள் நூல்படிகளைப் பெறுதல்
மு.இளங்கோவன் திரு.மன்னர்மன்னன் அவர்களுக்கு நூல்படிகளை அளித்தல்
திரு. ம.முனியாண்டி அவர்களுக்கு நூலாசிரியர் நூல்களை வழங்குதல்
முனைவர் மு. இளங்கோவன் ஏற்புரை
1 கருத்து:
வாழ்த்துகள்.
கருத்துரையிடுக