நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 28 மார்ச், 2012

நாட்டுப்புறவியல்


நாட்டுப்புறவியல்

புதுவையில் கல்லூரிப் பணியேற்றபொழுது நாட்டுப்புறவியல் என்னும் பாடத்தை நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது நாட்டுப்புறவியல் குறித்த நூல்கள் இளங்கலை மாணவர்களின் உள்ளத்தில் பதியும்படி எளிமையாக இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதற்காக இத்துறையின் முன்னோடி நூல்கள் பலவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்கினேன்.

முதல்பதிப்பு விற்று அடுத்தப் பதிப்பும் இந்த நூல் கண்டது. தமிழகத்தின் கல்லூரிகள் பலவற்றுள் இந்த நூல் பாடமாக உள்ளது. நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் அமைந்த இந்த நூலுக்கு என் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

நாட்டுப்புறவியல் என்னும் இந்த நூலில் 1. நாட்டுப்புறவியல் 2. தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, 3. நாட்டுப்புறப் பாடல் பற்றிய அறிஞர்களின் விளக்கம்/ கருத்துகள், 4. கதைப்பாடல்கள் 5. நாட்டுப்புறவியலும் மானிடவியலும் என்னும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

வயல்வெளிப் பதிப்பகம்,

இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்-612 901

பக்கம் 160
விலை 80

கருத்துகள் இல்லை: