நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சென்னையில் த.மு.எ.க.சங்கம் சார்பில் தமிழ் இணையம் அறிமுகம்


பார்வையாளர்கள்

சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில்(புதுச்சேரி விருந்தினர் இல்லம் அருகில்) த.மு.எ..க. சங்கம் சார்பில் தமிழ் இணையம் அறிமுகம் 28.08.2011 பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்றது.வகுப்பிற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் வந்திருந்தனர். இவர்களுள் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. த.மு.எ.க.சங்கம் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, பயனுடைய இணையதளங்கள், வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியா, நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகம் செய்தேன். பலருக்கு மின்னஞ்சல் உருவாக்கும் பயிற்சியையும் வழங்கினேன்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைத் தோழர் இலக்கியா வரவேற்று, நிகழ்ச்சி பற்றிய அறிமுகம் செய்தார். தோழர் பாரதிகண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

என் மாணவர் பிரேம் அவர்கள் வந்திருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்.

பார்வையாளர்கள்


ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதிகண்ணன்


வரவேற்புரையாற்றும் தோழர் இலக்கியா


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

என் இணையம் கற்போம் உள்ளிட்ட நூல்கள் இனி சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து திரும்பினேன்.

டிஸ்கவரி புக் பேலசு (DISCOVERY BOOK PALACE),
எண் 6, மகாவீர் காம்பளக்சு, முதல்மாடி,
முனுசாமிசாலை,
கலைஞர் கருணாநிதி நகர் (மேற்கு),
சென்னை 600 078

பேசி: 044 - 6515 7525
செல்பேசி: 994044650

மின்னஞ்சல்: discoverbookpalace@gmail.com

4 கருத்துகள்:

Vediyappan M சொன்னது…

மிக நிறைவான ஒரு நிகழ்வை நடத்தியதோடு அதை அழகாகவும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்! எமது புத்தக் கடையை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்! தங்களின் ஒத்துழைப்பு தொடரட்டும்.

Vediyappan M சொன்னது…

மிக முக்கியமான நிகழ்வை நடத்தியதோடு அதை அழகாகவும் எழுதியுள்ளீர்கள் அய்யா! வாழ்த்துக்கள். எமது புத்தகக் கடையை அறிமுகம் செய்த்தமைக்கு நன்றிகள். தங்களின் வழிகாட்டுதல் தொடரட்டும்

மணிச்சுடர் சொன்னது…

முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம். சென்னையில் த.மு.எ.க.சங்கம் சார்பில் நடத்திய தமிழ் இணையம் அறிமுகம் நிகழ்ச்சியில் தாங்கள் ஆற்றிய அரும்பணிகளை ஒளிப்படப் பதிவுகளோடு பார்த்தேன். இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவையான செயல்களை ஆற்றி வரும் தங்களின் தமிழ்ப்பணி நாடெங்கும் தொடர்ந்திட வாழ்த்துகள். பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை.

ஆடிப்பாவை சொன்னது…

தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள் முனைவரே.