நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 ஜூலை, 2011

அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழா - படங்கள்


அமெரிக்கத் தமிழ் விழாவில் நடிகர் நாசர் குத்துவிளக்கேற்றுதல்

 அமெரிக்காவின் வடக்குக் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் மாநகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பில் சார்பில் சூலை 1முதல் நான்கு நாள்களுக்குஆண்டு விழா நடைபெறுகிது.

 இதில் தமிழ் நாட்டிலிருந்து நடிகர் நாசர், சார்லி, புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மட்டைப்பந்து வருணனையாளர் அப்துல் சப்பார்,புதுகை பூபாளம் குழுவினர் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

 தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் பழனி சுந்தரம், தண்டபாணி குப்புசாமி, முத்துவேல் செல்லையா, சங்கரபண்டியன், அரசு செல்லையா, உள்ளிட்ட தமிழன்பர்கள் பலர் கலந்துகொண்டனர். பனைநிலத் தமிழ்ச் சங்கத்தார் நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

 கனடாவின் முதல் தமிழ் பாராளுன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இன்னும் இரண்டு நாளுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது. அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல் வெளியீடு, கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.


 கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் இனிமைத் தமிழ்மொழி என்னும் குறுவட்டை வெளியிட, முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.


அப்துல் சப்பார், நா.முத்துக்குமார் குத்துவிளக்கேற்றுதல்


மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள்



பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலரைத் திரைப்பட நடிகர் நாசர் வெளியிட, முதற்படியை முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்


பெருமழைப்புலவர் நூற்றாண்டு விழா மலரைத் திரைப்பட நடிகர் நாசர் வெளியிட முதற்படியை முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக் கொள்கின்றார்.அருகில் மாநாட்டுப் பொறுப்பாளர்கள்


நாட்டிய நிகழ்வு


நாட்டிய நிகழ்வு

2 கருத்துகள்:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஐயா! தங்களின் பதிவின் மூலம் கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த தகவல் கேள்விப்பட்டு பார்க்க ஆவலாய் இருந்தது. அந்த ஆவலை தங்கள் பதிவு நிறைவேற்றிவிட்டது.வழக்கம் போல் புகைப்படங்கள் அருமை.
நன்றி!

மணிவானதி சொன்னது…

சிறப்பான நிகழ்வில் கலந்துகொண்டு தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் பெருமைத் தேடிவரும் திரு இளங்கோவனைப் பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.