நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

மோகனூர்,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்...

நாள் 13.10.2008 திங்கள்கிழமை,

நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை

இடம்: சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரி, மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், இணையத் துறையில் தமிழ்சார்ந்து நடைபெற்றுள்ள முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ் இணையப் பயிலரங்கு மோகனூர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும், பெங்களூர் தமிழா.காம் நிறுவன உரிமையாளர் திரு.சு. முகுந்தராசு அவர்களும் வலைத்தள வடிவமைப்பாளர்கள் பொறியாளர் வே. முருகையன், பொறியாளர் வெ.யுவராசன் அவர்களும் மாணவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்து பயிற்சியளிக்க உள்ளனர். தமிழ் இணைய ஆர்வலர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இப் பயிலரங்கில் தமிழ்த் தட்டச்சு முறைகள். தமிழ் 99 விசைப்பலகை, ஒருங்குகுறி, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல், தமிழில் உரையாடல், வலைப்பூ உருவாக்கம், தமிழில் உள்ள மென்பொருள்கள், தமிழ்மணம் பணிகள், தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள், தமிழ் இணைய வானொலி, தமிழ் இணையத் தொலைக்காட்சிகள், மின்நூலகங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிப் பயிற்றுவிக்க உள்ளனர்.

பயிலரங்கத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி அவர்கள் செய்ய உள்ளார்கள்.

9 கருத்துகள்:

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

பொதுமக்களிடையே இணையத் தமிழ் விழிப்பை ஏற்படுத்தும் உங்களின் இது போன்ற அடுத்தடுத்த முயற்சிகள் பாராட்டத் தக்கது.

முகுந்த் அவர்களின் சொந்த மாவட்டத்தில் நிகழும் இந்த பயிலரங்கம் மாபெரும் வெற்றியை அடைய வாழ்த்துகள்.

Venkatesh சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துகள்

வெங்கடேஷ்

குப்பன்.யாஹூ சொன்னது…

இணைய கருத்தரங்கிற்கு வாழ்த்துக்கள்.

ஆனால் முடிந்த வரை மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமையை கற்று கொடுங்கள்.

தமிழ் நல்ல மொழி ஆனால் வேலை வாய்ப்பு சந்தையிலோ நேர்முக தேர்விலோ, அலுவலக பதவி உயர்விலோ, வாநிகதிலோ ஆங்கிலம்தான் பெரிதும் பயன் படும்.

எனவே தமிழோடு ஆங்கிலமும் சேர்த்து கற்று கொடுங்கள்.

அறிஞர் அண்ணாதுரை , வைகோ எவ்வாறு ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை பெற்றார்களோ அதே போல இரு மொழியும் கற்று கொடுங்கள்.

அதுவும், சென்னை அல்லது வெளி மாவட்டங்களில் படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள் , மேன்புர்ல் பொறியாளர்கள், ஆங்கிலப் புலமை இல்லாமல் எத்தனயோ அலுவலக மூலைகளிலேயே முடக்கி கிடக்கின்றனர்.

Lot of youg staff working in Infosys, TCS, cts, Sutherland, HDFC have not been able to get promotion because of poor fluency in English/ communication skills.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

குப்பன் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

தமிழ் பயிற்றுவிக்கும் கருத்தரங்கம் அன்று இது.
இணையம் பயிற்றுவிக்கும் கருத்தரங்கம்.தாய்மொழியில் சொன்னால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் எனத் தமிழ் வழியில் நடத்துகிறோம்.

நீங்கள் குறிப்பிடும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்கினாலும் தமிழர்களுக்கான பணிகளைச் செய்து தருவன அல்ல.அயல்நாட்டாருக்கான பணிகளைச் செய்கின்றன.
அயலவர்களுக்கான பணிகளைச் செய்யும்பொழுது அயல்மொழி தேவைதான்.ஆனால் தமிழகத்தில் ஆங்கிலத்திற்கு இருக்கும் முதன்மையை
இரண்டாம் இடத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

உருசியா,சீனா,சப்பான்,பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் அவரவர்களின் தாய்மொழி தெரிந்தால்தான் மதிப்பு.
பிறமொழியினரின் வல்லாதிக்கத்தைச் சீனர்கள் ஏற்பது இல்லை.நம் கணிப்பொறி வல்லுநர்கள் கூகுள் நிறுவனத்தை மட்டும் நம்பிக் கிடக்க சீனர்கள் பைடு என்னும் தேடுபொறி தளத்தை உருவாக்கி கூகுளை தங்கள் நாட்டில் செல்வாக்கு இல்லாமல் ஆக்கிவிட்டனர்.சீனாவில் ஆங்கிலமே தெரியாத பலர் நோபல் பரிசு வாங்கியுள்ளனர்.துணைவேந்தர் பலருக்கு ஆங்கிலம் தெரியாது.தாய்மொழி மட்டும்தான் தெரியும்.

நம் நுனிநாக்கு ஆங்கில அறிஞர்களுக்கு ஒரு பக்கம் தாய்மொழியாம் தமிழில் பிழையின்றி எழுத தெரியாது. நிலைமை அப்படி இருக்க ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காகப் பதவி உயர்வு இல்லை என்பதைவிட அவர்களின் பிற திறமைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆங்கிலம் மட்டும் சரளமாகப் பேச,எழுதத் தெரிந்தால் பதவி உயர்வு என்றால் வெளிநாட்டினர் பலர் ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறி இருக்கலாமே. மொழியறிவுடன் துறையறிவும் நிரம்பத்தேவை.

எனவே தாய்மொழியுடன் பிறமொழி அறிவு இருப்பது தேவை என்பதை உணரும் அதே வேளையில் அவரவர் தாய்மொழிக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையேன்.

தங்கள் கருத்துக்கு நன்றியன்.

செல்வமுரளி சொன்னது…

விழா சிறக்க எனது இனிய நல்வாழ்த்துக்கள்.
சென்ற முறை தர்மபுரியில் நடைபெற்ற கருத்தரங்கில் நான் கலந்துகொண்டேன். மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
திரு. கோபி, மற்றும் முகுந்த ராசு மற்றும் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
என்றும் அன்புடன்
செல்வமுரளி

வேளராசி சொன்னது…

விழா சிறக்க எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

Yuvaraj சொன்னது…

குப்பன் யாகூ விற்கு நல்ல பதில் அளித்தீர்கள்.

நாமக்கல் சிபி சொன்னது…

பொதுமக்களிடையே இணையத் தமிழ் விழிப்பை ஏற்படுத்தும் உங்களின் இது போன்ற அடுத்தடுத்த முயற்சிகள் பாராட்டத் தக்கது.

முகுந்த் அவர்களின் சொந்த மாவட்டத்தில் நிகழும் இந்த பயிலரங்கம் மாபெரும் வெற்றியை அடைய வாழ்த்துகள்.

நசரேயன் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்