நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

தருமபுரி வலைப்பதிவுப் பயிலரங்கக் காட்சிகள்...


விசய் பதின்நிலை மேல்நிலைப்பள்ளி தோற்றம்


பார்வையாளர்கள் ஒரு பகுதி


பார்வையாளர்கள் ஒருபகுதி


தருமபுரியில் 14.09.2008 காலை பத்து மணியளவில் தொடங்கிய வலைப்பதிவுப் பயிலரங்கு பகல் ஒரு மணிக்கு நிறைவுற்றது.விசய் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்,கல்வியியல் பயிலும் மாணவர்கள்,கணினி ஆர்வலர்கள்,தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.முகுந்து,மு.இளங்கோவன்,கோபி மூவரும் அரங்கிற்கு முதற்கண் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,உரையாடல்,வலைப்பூ உருவாக்கம் பயிற்றுவிக்கப்பட்டன.ஒரு மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.மீண்டும் மாலை 6 மணியளவில் தமிழும் இணையமும் சிறப்புரை இடம்பெற உள்ளது.பயிலரங்கின் சில படங்கள் இணைக்கிறேன்.எஞ்சியவை நாளை பதிவில் இடுவேன்.

2 கருத்துகள்:

மஞ்சூர் ராசா சொன்னது…

பயிலரங்கம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வணக்கம்

உங்களது வலைப்பூவை பார்த்து இன்று தர்மபுரியில் நடைபெற்ற இணையப் பயிலரங்கம் கலந்து கொண்டேன்.
சிறப்பான முறையில் நடைபெற்றது. உங்களது தமிழ் ஆர்வம் எங்களையும் வியக்க வைத்தது. சிறப்பான முறையில் ஒரு கருத்தரங்கை நடத்தியமைக்கு எங்களது அன்புக்களும், வாழ்த்துக்களும்.

எங்களது நிறுவனம் தமிழில் http://tamilvanigam.in என்ற பெயரில் ஓர் இணைய தளத்தை நடத்தி வருகிறது. வர்த்தகம் குறித்த சேவைக்கான தளம் என்றாலும் உங்களது தமிழ் தொண்டிற்காக நாங்கள் எங்கள் தளத்தில் இன்று தர்மபுரியில் நடைபெற்ற கருத்தரங்கு குறித்த செய்திகளை வெளியிட உள்ளோம்.
எனவே இன்று நடைபெற்ற மேலும் மாலை நடைபெற இருக்கும் செய்திகளைம் சேர்த்து ஓர் செய்தியாக அளித்தால் நன்றாக இருக்கும்.
எனவே கருத்தரங்கு கறித்த தகவல்களை எங்களது செய்தித்தளத்தில் வெளியிட ஆர்வமாக உள்ளோம்.

மீண்டும் எங்களது நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்களும், அன்புகளும்

என்றும் அன்புடன்

தள நிர்வாகி
admin@4rthestate.com
http://www.tamilvanigam.in
www.medilifeinfo.com