நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 10 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் உங்கள் பங்களிப்பு?

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு 11.05.2008 ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுவதை இணையத் தோழர்களுக்குத் தெரிவித்த உடன் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வாழ்த்துகள்
வந்த வண்ணம் உள்ளன.அனைவருக்கும் நன்றி.

நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் வலையேற்றப்படும்.அதுபோல் இணையத்தில் உள்ள அனைத்துப் பயன்களும் பயிற்சியாளர்களுக்கு விளக்கப்படும்.

தமிழ்மணம்,தமிழ்வெளி,தேன்கூடு,கூகுள்,யாகு நிறுவனம் அவை சார்ந்த செயல்பாடுகள், இணைய இதழ்கள்,தமிழ் மின்னஞ்சல்,தமிழ் உரையாடல்(அரட்டை),படம் அனுப்புவது,ஒலிப் பதிவு செய்வது,வலைப்பூ உருவாக்கம் பற்றிப் பயிற்சியாளர்களுக்குச் செய்முறைப்பயிற்சி வழங்க உள்ளோம்.

நாளை இணைய இணைப்பில் உள்ள தோழர்கள் பயிற்சியில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச் சொல்லாம். உரையாடலின் வழி நீங்களும் பங்குகொண்டு உதவலாம்.முந்தைய பயிற்சியில் இணைப்பில் இருந்த தோழர்களுடன் தொடர்புகொள்ள முயன்றோம்.அவர்கள் தொடர்பில் வராததால் பயிற்சி வழங்கியவர்களும் பயிற்சிபெற்றவர்களும் ஏமாற்றம் அடைந்தோம்.

வெளிநாட்டில் உங்கள் மொழிக்காரரை, ஊர்க்காரரைப் பார்த்தால் கைகுலுக்கிப்பேசி மகிழ்வதுபோல் தமிழ் இணையத்துறையில் கைபதிக்கும் ஆர்வலர்களை ஊக்கப்படுத்துவது உங்கள் கடமையல்லவா?

எந்த வேலை இருந்தாலும் சிறிதுநேரம் ஒதுக்கி வைத்துவிட்டுப் புதியவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.

தமிழ் வளர்ச்சிக்கு இணையத்தைப் பயனபடுத்துவது,தங்கள் எண்ணங்களை,படைப்புகளை இணையத்தில் வெளிப்படுத்துவது எவ்வாறு? என்ற நோக்கில் அமையும் இப்பயிலரங்கிற்குத்
தங்கள் அறிவுரைகளை மின்னஞ்சலில்,உரையாடலில், பதிவுகளில் வெளிப்படுத்துங்கள்.
மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை: