நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 ஜனவரி, 2008

புதுச்சேரி உளவியல் சங்கம், தேசியக் கருத்தரங்கம். சனவரி 5-6

புதுச்சேரி உளவியல் சங்கம் தேசியக்கருத்தரங்கம் ஒன்றினைச் சனவரி 5-6 நாள்களில்
புதுவை சுப்ரேன் தெருவில் உள்ள கூடடுறவுப் பயிற்சிக்கூடத்தில் நடத்துகிறது.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அறிஞர்கள் உளவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.

முன்னாள் துணைவேந்தர் அ.ஞானம் அவர்கள் தலைமையுரை ஆற்ற,புதுச்சேரி முதலமைச்சர்
மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கின்றார்.உளவியல் சார்ந்த சிறந்த நூல்கள், கட்டுரைகளுக்குப் பரிசு வழங்கப்பட உளளது.

கல்விவள்ளல் வி.முத்து,சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன்,பேராசிரியர் பெரியார்தாசன்,பேராசிரியர் மமுதாதாசு,முனைவர் பாஞ்.இராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: