பாரதி இலக்கியச் சுடர் விருது பெறுவோர்
புதுச்சேரியில் அமைந்துள்ள பாரதிதாசன் அறக்கட்டளை
பாரதிவிழாவை இன்று(09.12.2012) காலை 10 மணிமுதல் 1 மணி வரை நடத்தியது.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர்மன்னன்
தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் நாக.செங்கமலத் தாயார் அனைவரையும் வரவேற்றார்.
பல்லவன் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர்
வி.முத்து அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.
கோ.பாரதி அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.
பொறிஞர் “இராதே” இரா.தேவதாசு, முனைவர் சொ.சேதுபதி,
முனைவர் மு.இளங்கோவன், முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோருக்குப் “பாரதி
இலக்கியச்சுடர்” விருது வழங்கப்பட்டது.
கோ.பாரதி, மன்னர்மன்னன், வி.முத்து, மு.இளங்கோவன்
முனைவர் சொ.சேதுபதி விருதுபெறல்
முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் விருதுபெறல்
முனைவர் மு.இளங்கோவன் விருதுபெறல்