நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 செப்டம்பர், 2023

வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இணையம் கற்போம்

 


நூல்: இணையம் கற்போம்

ஆசிரியர்: முனைவர் மு. இளங்கோவன்

  தமிழ் இணையம் சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இணையம் கற்போம் என்னும் தலைப்பில் நூலாக்கி 2009 இல் வெளியிட்டேன். அக்கட்டுரைகள் என் வலைப்பதிவிலும் பதிவேற்றப்பட்டன. பல கட்டுரைகள் தினமணி உள்ளிட்ட நாளிதழ்களிலும் வெளிவந்து  இணைய ஆர்வலர்களுக்குப் பயன்பட்டன. 

 இணையம் கற்போம் நூல் 29 கட்டுரைகளுடன், 256 பக்கங்களைக் கொண்டு இப்பொழுது மறுபதிப்பு கண்டுள்ளது. இந்த நூலுக்குக் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் முன்பே அழகியதோர் அணிந்துரை நல்கியுள்ளார். 

 கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். தமிழ் ஆர்வலர்கள் தங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்கத் தகுந்த நூல்; தமிழ்ச்செல்வந்தர்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக அளித்து மகிழத்தக்க நூல்.

 தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் வசதி, வலைப்பதிவு உருவாக்கம், எழுத்துரு மாற்றம், தமிழ்க் கல்வி தரும் இணையதளங்கள், தமிழுக்கு வளம் சேர்க்கும் இணையதளங்கள், தமிழ் மின்னூலகங்கள், விக்கிப்பீடியா, விகாஸ்பீடியா, சமூக வலைத்தளங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்டவற்றின் அறிமுகங்கள் எளிய தமிழில் தரப்பட்டுள்ளன.

 இணையம் கற்போம்  நூல் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பு எண்: + 9442029053 மின்னஞ்சல்: muetamil@gmail.com

வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம்

இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்),

கங்கைகொண்டசோழபுரம் (வழி),

உடையார்பாளையம் (வட்டம்),

அரியலூர் மாவட்டம் - 612901


வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் மு. இளங்கோவன் நூல்கள்

  1.  மாணவராற்றுப்படை (1990)
  2.   பனசைக்குயில் கூவுகிறது (1991)
  3. அச்சக ஆற்றுப்படை (1992)
  4. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994)
  5. விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்(1995)
  6. பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு(1996)
  7. இலக்கியம் அன்றும் இன்றும் (1997)
  8. மணல்மேட்டு மழலைகள் (1997)
  9. வாய்மொழிப் பாடல்கள் (2001)
  10. பாரதிதாசன் பரம்பரை (2001)
  11. பழையன புகுதலும் (2002)
  12. அரங்கேறும் சிலம்புகள்(2002)
  13. பொன்னி பாரதிதாசன் பரம்பரை (2003)
  14. பொன்னி ஆசிரியவுரைகள் (..) (2004)
  15. நாட்டுப்புறவியல் (2006)
  16. அயலகத் தமிழறிஞர்கள் (2009)
  17. கட்டுரைக் களஞ்சியம்(2013)
  18. செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்(2013)
  19. இணையம் கற்போம்(2016)
  20. தொல்லிசையும் கல்லிசையும் (2019)
  21. இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் (2022)
வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களைப் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பு எண்: + 91 9442029053
மின்னஞ்சல்: muetamil@gmail.com





v'