நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 15 ஜூன், 2022

மலேசியாவின் ஈப்போ மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு!



தமிழிசைத் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள்

வரவேற்கப்படுகின்றன! 

  தமிழிசையின் சிறப்பினை வளரும் தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக மலேசிய நாட்டின் ஈப்போ  மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு 2022, நவம்பர் 20 இல் நடைபெற உள்ளது. தமிழர், தமிழ் மொழிகலை, பண்பாட்டோடு இணைந்திருக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் ஈப்போ வெற்றித் தமிழர் பேரமைப்பும் இணைந்து, உலகெங்கும் உள்ள தமிழ் இசை வல்லுநர்களை ஒன்றிணைத்து இந்த உலகத் தமிழ் இசை மாநாடு – 2022 நடத்துகின்றன

 தமிழிசை மாநாடு நடைபெறும் நாளன்று பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சிக்   கூடம்  காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ் இசைத் தொடர்பான ஆவணப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் இம்மாநாட்டினை ஒட்டி மாநாட்டு மலர் ஒன்று வெளிடவும் உள்ளனர். இந்த மாநாட்டு மலருக்குத் தமிழ் இசைத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

    தமிழிசை சார்ந்த கட்டுரைகள் / கவிதைகளை worldtamilmusiccon2022@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  31/8/2022 - க்குள் அனுப்பி வைக்கலாம்.  

    உலகத் தமிழ் இசை மாநாடு குறித்த மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள மாநாட்டுத் தலைவர் கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்களின் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

தொடர்பு எண் +6 012500 6161 

கருத்துகள் இல்லை: