நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 27 மார்ச், 2022

விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்வோம்!

 

 

 தமிழ் மாமுனிவர் விபுலாநந்த அடிகளார் அவர்களின் பிறந்தநாள் மார்ச்சு 27 ஆகும். யாழ்நூல் கண்ட ஆராய்ச்சிப் பேரறிஞரின் வாழ்வியலை ஆவணப்படமாக்கி, உலகம் முழுவதும் திரையிட்டு, அடிகளாரின் பெருமையைத் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு நினைவுகூர்ந்தோம்

 பேராசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், பன்னூலாசிரியர், மாந்தநேயம் கொண்ட அடிகளார் எனப் பன்முகம் கொண்ட விபுலாநந்த அடிகளார் இயற்றிய வெள்ளைநிற மல்லிகையோ… எனும் பாடலை இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்களைப் பாடச்செய்து, புதுவை நாட்டியக் கலைஞர் திரு. கிருட்டினன் அவர்களின் குழுவினரின் துணையுடன் காட்சிப்படுத்தி எம் ஆவணப்படத்தில் இணைத்தோம்

 உலகத் தமிழர்கள் கண்டுகளிக்க அடிகளாரின் பிறந்தநாள் பரிசாக இன்று இணையவெளியில் வழங்குகின்றோம். கண்டு மகிழுங்கள். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் இந்தப் பாடலைப் பயன்படுத்தி, நம் பிள்ளைகளின் உள்ளங்களில் நற்பண்புகளை மிளிரச்செய்யுங்கள். விபுலாநந்த அடிகளார் புகழ்பரப்பும் பணியில் துணைநின்ற கனடா வாழும் சிவம் வேலுப்பிள்ளை (நிறுவுநர், திருக்குறள் அறக்கட்டளை) அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் போற்றுகின்றோம்.

வெள்ளை நிற மல்லிகையோ என்ற அடிகளாரின் புகழ்பெற்ற பாடலின் காணொலியைப் பார்ப்பதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

இணைப்பு

கருத்துகள் இல்லை: