நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஆச்சார்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா!







புதுச்சேரிவில்லியனூரில் அமைந்துள்ள ஆச்சார்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 20.04.2018 மாலை நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு, உரையாற்றும் அரிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. "உலகத் தரத்திலான கல்வி" (world Class Education) என்னும் மூல மந்திரத்தை இலக்காகக் கொண்டு நடைபெறும் இக்கல்லூரியின் மேலாண்மை இயக்குநர் திரு. ஜெ. அரவிந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவைச் சுருக்கமாக எடுத்துரைத்து, உரையாற்றினேன். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினேன். கல்லூரி முதல்வர் முனைவர் எல்.இராமச்சந்திரன் அவர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் இந்த நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். புதிய புதிய மாணவர்களைச் சந்திக்கும் இதுபோன்ற விழாக்களில் உரையாற்றுவது தமிழால் கிடைத்த பேறு என்றே சொல்லவேண்டும்.



கருத்துகள் இல்லை: