பேராசிரியர் அப்துல்காதர் ஐயா கருத்தரங்க ஆய்வுக்கோவையை வெளியிட முனைவர் கோ. விசயராகவன் பெற்றுக்கொள்ளும் காட்சி.
சென்னை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கமும்
இணைந்து “தமிழ்
வளர்ச்சிக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் பங்களிப்பு” என்னும் பொருளில் தேசியக்
கருத்தரங்கினை வேலூர் மாவட்டம்
ஏலகிரியில் இன்று(11.09.2016) நடத்தின.
பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் வரவேற்புரையாற்றவும், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன், புதுவை முனைவர் மு.இளங்கோவன், எழுத்தாளர்
வசந்தநாயகன், முனைவர் கண்ணாத்தாள், மருத்துவர் மதுரம் சேகர் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் மகன் திரு. த. பாரி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பேராசிரியர்
அப்துல்காதர் அவர்கள் கருத்தரங்க மலரினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்களும்
ஆய்வாளர்களும் முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் படைப்புகள் குறித்து ஆய்வுக்கட்டுரை
வழங்கினர். தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
2 கருத்துகள்:
விழா நிகழ்வுகளைப் பகிர்ந்ததைக்கு நன்றி.
மகிழ்ந்தேன் ஐயா
கருத்துரையிடுக