நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வுதிருக்குறள் திலீபன் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்துவளர்ந்து, தமிழர்களிடம் இருந்த கவனகக் கலையைக் கற்று அதனை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் பெரு விருப்பம்கொண்ட தம்பி. அவரைப் பற்றி முன்பே என் பக்கத்தில் அறிமுகப்படுத்தி எழுதியுள்ளேன். தம்பியின் கவனகக் கலையின் நூறாம் நிகழ்வு சிவகங்கை மாவட்டக் கவனகக் கலை மன்றத்தாரால் 08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் திருக்குறள் திலீபனை ஏற்றுப் போற்றுவது தமிழுக்குச் செய்யும் உண்மைத்தொண்டாக இருக்கும். திரைப்படத்துறையினர், சின்னத்திரைக் கலைஞர்களை அழைத்து மகிழும் அயலகத் தமிழர்கள் அறிவார்வம்கொண்ட, திருக்குறள் திலீபன் போன்ற தமிழ்ப்பற்றாளர்களை அழைத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கவனகக் கலையின் மேன்மையை அறிமுகம் செய்யலாம். தங்கள் குழந்தைகளையும் இக்கலையைப் பயில வாய்ப்பு உருவாக்கலாம்.

தொடர்புக்கு:

திருக்குறள் த. திலீபன்

அலைப்பேசி : 0091 75022 72075,     0091 94865 62716
மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com

வலைப்பதிவு : www.thirukkuraldhileeban.in

கருத்துகள் இல்லை: