நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 ஜனவரி, 2012

பெரியார் தொண்டர் து.தில்லைவனம் மறைவு

பெரியார் பற்றாளரும் தலைசிறந்த பகுத்தறிவு அன்பருமான து.தில்லைவனம் அவர்கள் இன்று(17.01.2012) மாலை இயற்கை எய்தினார். காட்டுமன்னார்கோயில் அடுத்த சின்னபுங்கனேரி என்னும் ஊரில் பிறந்தவர். வேளாண்மைப் பட்டதாரியான இவர் வேளாண்மை ஆசிரியராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தவர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மாலை இவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். பெரியார் சிந்தனைகள் நூல் வெளிவர பெரும் பங்காற்றியவர். சிந்தனையாளன், பெரியார் ஊழி(ஆங்கில ஏடு) ஏடுகளின் ஆசிரியர்குழுவில் இடம்பெற்றவர். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர்.

1 கருத்து:

தமிழ்ப்பறை சொன்னது…

அய்யா து.தில்லைவனம் அவர்களின் மறைவு செய்தி சற்றுமுன் முகநூல் மூலம் அறிந்தேன்.நிறைவாழ்வினை இச்சமூகத்திற்காக வாழ்ந்தவர். அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தார்க்கும், இயக்கத்தோழர்களுக்கும், குறிப்பாக அய்யா ஆனைமுத்து அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பசு.கவுதமன்