நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 ஜனவரி, 2012

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்-பெரியார் விருது

சென்னை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழுக்கும், தமிழர்க்கும் ஆக்கமான பணிகளைச் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பெரியார் விருது ஆண்டுதோறும் வழங்கிவருகின்றனர். அந்த வகையில் எனக்கும் வேறு சில நண்பர்களுக்கும் இந்த ஆண்டு பெரியார் விருது வழங்குகின்றனர். இன்று மாலை(16.01.2012) 6 மணியளவில் சென்னை பெரியார்திடலில் நடைபெறும் விழாவில் விருதுபெறுகின்றேன். சென்னை நண்பர்கள் முடிந்தால் வந்து மகிழ்ச்சியூட்டலாம்.

இன்று காலையில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வர உள்ளேன். பிறகு மாலை நிகழ்வுக்குப் பெரியார் திடலுக்கு வருவேன். வாய்ப்பு உள்ளவர்கள் சந்திக்கலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸ், விழிகள் பதிப்பகம் இவற்றில் கிடைக்கும்.

5 கருத்துகள்:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

வாழ்த்துகள் இளங்கோ மிக்க மகிழ்ச்சி தொடர்க தமிழ்ப்பணி.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

விருது பெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. புத்தகக் கண்காட்சியைக் காண இயலாதது பெரிய வருத்தம்.

.kavi. சொன்னது…

வாழ்த்துக்கள் இளங்கோவன்.

.kavi. சொன்னது…

வாழ்த்துக்கள் இளங்கோவன்
.கவி.

Unknown சொன்னது…

வாழ்த்துகள் அய்யா, தங்களின் சமூகப்பணிகள் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள்.