நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 9 ஜனவரி, 2009

ம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய பாடல்கள் தங்கப்பாப்பாவுக்குத் தங்கப்பாடல்கள் குறுவட்டு வெளியீடு



பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.மரபுப்பாடல்கள் எழுதுவதில் வல்லவர்.சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆற்றல் உடையவர்.சிறுவர்களுக்கு இவர் எழுதிய எங்கள் வீட்டுச் சேய்கள், இயற்கை விருந்து,மழலைப்பூக்கள் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இப்பாடற் தொகுதியிலிருந்து சிறந்த பாடல்கள் 29 ஐத் தேர்ந்தெடுத்துத் தக்க
இசைக்கலைஞர்களைக் கொண்டு பாடுவித்துக் குறுவட்டாகவும் ஒலிநாடாவாகவும் வெளியிட உள்ளனர்.

இந்தப் பாடல்கள் பிறமொழிச்சொற்கள் கலவாமல் எழுதப்பட்டுள்ளன.பள்ளிக் குழந்தைகளுக்கு வாங்கியளிக்கலாம்.வீட்டுப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கேட்கச் செய்யலாம். பெரியவர்களும் கேட்டு மகிழலாம்.மழலைகளுக்கு உரிய அரிய பாடல்கள் இத்தொகுதியில் உள்ளன.

முன்விலையில் பதிந்து வாங்குபவர்களுக்குச் சலுகைவிலை உண்டு.குறுந்தகடு 70.00 உரூவா மதிப்பு. முன்பதிவில் 60.00 உரூவாவிற்குப் பெறலாம்.ஒலிநாடா 40.00 விலை.முன்பதிவில் 30.00 உரூவாவிற்குப் பெறலாம்.

தொடர்பு முகவரி :

வானகப் பதிப்பகம்
7,பதினொன்றாம் குறுக்கு,
அவ்வை நகர்,புதுச்சேரி - 605 008
தொலைபேசி 0413- 2252843
மின்னஞ்சல் : seruvenrachezhian@gmail.com

ஒலி வட்டும் குறுந்தகடும் 15.02.2009 மாலை புதுச்சேரியில் வெளியிட உள்ளனர்.

கருத்துகள் இல்லை: