நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 9 மே, 2008

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிலரங்கு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 11.05.2008(ஞாயிறு) வலைப்பதிவர் பயிலரங்கு நடைபெறுகிறது.காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை நிகழ்ச்சி நடைபெறும்.தமிழ்நாட்டு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் வலைப்பதிவர் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.கல்லூரி முதல்வர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

விழுப்புரம் புதுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சிபெற-பயன்பெற உள்ளனர்.பயிற்சியாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் குறுவட்டு ஒன்று உரூவா பதினைந்து விலையில் வழங்கப்படும்.ஆர்வமுடையவர்கள் கலந்துகொண்டு பயிற்சி தரலாம்.பயன்பெறலாம்.

வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையப் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள விழைவார்க்குப் பயன்தரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் செய்திகள் பெற விரும்புபவர்கள் http://vizhuppuramvalaippathivar.blogspot.com/
என்னும் தளத்திலும் திரு. தமிழநம்பி அவர்களின் 94434 40401 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் பக்கதிற்குச் செல்ல இங்கு இணைப்பு

20 கருத்துகள்:

நா. கணேசன் சொன்னது…

பயிலரங்கு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி.
மு.இளங்கோவன்

Unknown சொன்னது…

அன்புமிக்க இளங்கோவன்,
இத்தகைய பயிலரங்குகளே இப்போது
தேவை.தமிழ்நாட்டின் தலைநகரில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துங்கள்.
மாணவர்களுக்குச் சரியான இலக்கைக்காட்ட இவை உதவும்
மறைமலை இலக்குவனார்

இராம.கி சொன்னது…

பயிலரங்கிற்கு வாழ்த்துக்கள். இது போன்ற அரங்குகள் மற்ற மாவட்டத் தலைமையிடங்களிலும் நடந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் தமிழாசிரியத் தொடர்புகளை வைத்து அந்தப் பணியை ஊக்குவியுங்கள். கணிக்கும் தமிழுக்கும் பிணக்கில்லை என்பதை எல்லோரும் அறியட்டும்.

ஊரெல்லாம் தமிங்கிலம் பரவிவரும் இந்தக் காலத்தில், தமிழாசிரியர்கள் மீண்டும் முன்வந்து பணியாற்றித் தமிழின் புதுமலர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

அன்புடன்,
இராம.கி.

மயிலாடுதுறை சிவா சொன்னது…

பயிலரங்கம் நன்கு வெற்றிப் பெற வாழ்த்துகள்!

மயிலாடுதுறை சிவா...

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பயிலரங்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

தமிழ்99 ஒட்டிகள் விநியோகம் தொடர்பாக திரு.தமிழ்நம்ப அவர்களை தொடர்புக்கொண்டேன்... அவர்களும் ஆவணம் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள்...

தமிழ்99 ஒட்டிகள் - உங்களுடைய ஆதரவை நாடி...http://kaniniarimugam.blogspot.com/2008/03/99.html

பார்வைகள் சொன்னது…

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம்.
மிகக் குறைந்த நாள் இடைவெளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பிருக்காது. பயிலரங்கு வெற்றிபெற வாழ்த்துகள்.
- முனைவர் தி.நெடுஞ்செழியன்.

KRP சொன்னது…

வாழ்த்துக்கள்

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

sugumaran சொன்னது…

தகவலுக்கு நன்றி நான் தங்களை விழுப்புரத்தில் சந்திக்கிறேன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி.தமிழர்கள் அனைவருக்கும்
இணையத்தைக் கொண்டு சேர்ப்போம்.
மு.இளங்கோவன்

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

உள்ளோம் அய்யா :))

உண்மைத்தமிழன் சொன்னது…

பயிற்சிப் பட்டறை நல்லபடியாக நடந்தேற வாழ்த்துகிறேன்..

thamizham சொன்னது…

தங்களின் இந்தச் செயல் வாழ்த்துதற்குரியது, தமிழின் செயற்பாட்டினை உலகறியச் செய்வது
வாழ்த்துகள்
அன்புடன்
பொள்ளாச்சி நசன்

நா. கணேசன் சொன்னது…

அன்புடன், முத்தமிழ், பண்புடன், சந்தவசந்தம், கூஸ்டன் தமிழ், தமிழ்மணம், பிரவாகம், மின் தமிழ், என்று பல கூகுள் தமிழ்க்குழுக்கள் உள்ளன. அங்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்குகள் பற்றிச் சொன்னேன். அம்மடலில் என் வேண்டுகோள் காண்க.

-----------------------------------
உங்களுக்குத் தெரிந்த கல்லூரிகளில் வார இறுதி நாட்களில் பெரிய அறை, இணைய வசதி, சில கணினிகள் ஒருநாள் வாங்கி யுனிகோட் தமிழ் எழுதும் பயிற்சி, கூகுள் குழுக்களில் எழுதல்/படித்தல், வலைப்பதிவுகளில் பதித்தல், தமிழ்மணம் (http://tamilmanam.net ), தமிழ்வெளி, தேன்கூடு, ... போன்ற திரட்டிகளில் இணைத்தல் இவற்றுக்கு நண்பர்களுடன் சேர்ந்து நடத்தலாமே.

ஏதாவது உதவி வேண்டுமென்றால் கேளுங்கள் நன்றி. சென்னை, புதுவை, கோவை, விழுப்புரம், போல ஏதாவது வலைப் பயிலரங்குகள் நடந்தால் அறியத் தாருங்கள்.

பத்திரிகையியல், தமிழ், வரலாறு, சமூகவியல் (sociology), ... போன்ற துறை மாணவர்களுக்கு கல்லூரிகளில் இணையத்தில் தமிழில்
பதிவது எப்படி? என்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் புகுந்து கற்பித்தால் தமிழ் தானாய் வளரும். இங்கும் எழுதுவார்கள் தானே?

உங்கள் ஊர்க் கல்லூர்ரிகளின் உதவி இருந்தால் வலைப்பதிவுப் பட்டறைகள் வளரும் அல்லவா? செய்வார்ர்களா?

முன்னோடிகளாய் வழிகாட்டும் புதுவை, விழுப்புரம் மக்களுக்கு நன்றி.

நா. கணேசன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வரும் கல்வியாண்டில் தங்கள் எண்ணத்தை ஈடேற்றுவோம்.
வாழ்த்திற்கு நன்றி.
மு.இளங்கோவன்

சகாதேவன் சொன்னது…

சினிமா போல் சென்ஸார் கிடையாது, பத்திரிகை போல எடிட் ஆகி பதிவு ஆவதில்லை என்பதால் சிலர் கண்டபடி எழுதுகிறார்கள். நல்ல தமிழில் தங்கள் நினைவுகள், கட்டுரை, சிறுகதைகள், எண்ணங்கள் என்று பொதுவான செய்திகளை எழுதுமாறு எடுத்துச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் எப்படி இருந்தது என்று பதியுங்கள்.
வாழ்த்துக்கள்.
சகாதேவன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் அறிவுரைக்கு நன்றி.
நிகழ்ச்சி முறை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றப்படும்.நிறைவில்
தொகுப்பும் வழங்குவோம்.
மு.இளங்கோவன்

Venkatesh சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்!!

வெங்கடேஷ்
திரட்டி.காம்

-/சுடலை மாடன்/- சொன்னது…

பயிலரங்கு நடக்கவிருப்பது மிக நல்ல செய்தி. சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

நன்றி - சொ. சங்கரபாண்டி

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வாழ்த்திற்கு நன்றி.
மு.இளங்கோவன்