சங்க இலக்கியமான புறநானூறு உ.வே.சா அவர்களால் 1894 இல் முதன்முதல் பதிப்பிக்கப்பெற்றது.அதன் படிகள் இன்று பார்வைக்குக் கிடைப்பதில்லை.உலகத் தமிழர்களின் பார்வைக்கு முதற்பதிப்பின் படங்கள் சில காட்சிக்கு வைக்கப்படுகின்றன.கண்டு மகிழுங்கள்.முதற் பதிப்புப் பற்றிய விரிந்த கட்டுரை விரைவில் உள்ளிடுவேன்.
முகப்புப் பக்கம்
இரண்டாம் பக்கம்
உ.வே.சா.முன்னுரை
பாடப்பட்டோர் பாட வேறுபாடு
பாடப்பட்டோர் பாட வேறுபாடு
புறநானூறு பொருளடக்கம்
புறநானூறு மூலமும் உரையும்
புறநானூறு மூலமும் உரையும்
பாடல் முதற்குறிப்பு அகராதி
அருஞ்சொல் அகராதி
புறம்.உரையில் இடம்பெறும் சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு அகராதி
சிலம்பு.உரையில் புறம்.பாடலடிகள் இடம்பெறும் இடங்கள்
சிந்தாமணி உரையில் புறம்.பாடலடி இடம்பெறும் இடங்கள்
பிழைத் திருத்தம்
படங்களை எடுத்து ஆள விரும்புவோர் இசைவுபெறுக.இணைப்பு வழங்குக.
8 கருத்துகள்:
தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் முதற்பதிப்பின் படங்களின் தொகுப்புக்கு பாராட்டுக்குக்கள்.நன்றிகள்.
தங்களுடைய கட்டுரைகளுக்கு காதிருக்கிறேன்.
அன்புள்ள இளங்கோவன்,
புத்தகப் பக்கங்களை மின்வருடினீர்களா (ஸ்கான்) அல்லது எண்மியப் படம் பிடித்தீர்களா (digital camera) என்பதை அறிய விரும்புகிறேன்.
படம் பிடித்தது போலப் படுகிறது. மின்வருடல் எனின் கோப்பு வகை (file type) பொருத்தமில்லை என நினைக்கிறேன். bmp (அல்லது tiff) வடிவம் பொருத்தமாயிருக்கும்.
நூலகத் திட்டத்தினரால் 1000 க்கும் அதிகமான ஈழத்து நூல்களும் இதழ்களும் மின்வருடப்பட்டு noolaham.net இல் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளன.
வாழ்த்துக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புறநானூறு உ.வே.சா முதற்பதிப்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் இருந்தது(1894 இல் பதிப்பு).எனவே படமெடுத்து வெளியிட்டுள்ளேன். மின்வருடல் செய்ய நூல்படி ஒடிந்துவிடும்.
தங்கள் அன்பிற்கு நன்றி.
மு.இளங்கோவன்
முனைவர் இளங்கோவன் அவர்கள்ளுக்கு நன்றி
வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க இலக்கிய ஆய்வு கூட்டம், திருக்குறளை முறையாக நான்கு ஆண்டு கற்று முடித்து விட்டு, வரும் வாரம் முதல் புறநானூறுப் படிக்க இருக்கிறோம். உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளது.
அன்புடன்
நாஞ்சில் பீற்றர்.
www.thirukkural2005.org
தங்களை ஒத்த அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு மிகுந்த பயன் நல்கும் என வெளியிட்ட புறநானூறு குறித்த பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் பதிப்புப் பற்றிய கட்டுரை வெளிவரும்.
தங்கள் தமிழ்ப் பற்றினைப் போற்றி மதிக்கிறேன்.
மு.இளங்கோவன்
padangkal mikavum siRappAka vandhuLLana. pArAttukaL!
anbudan,
Devamaindhan
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
மு.இளங்கோவன்
கருத்துரையிடுக