நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஜூன், 2012

நீச்சல்காரனின் தமிழுக்கு ஆக்கமான சந்திப்பிழை திருத்தி…
இணையத்தில் குழுச்சண்டைகள், இனச்சண்டைகள், சாதிச்சண்டைகள், அவதூறு பரப்பல், துதிபாடல் என்று பலவகை செயல்பாடுகள் ஆர்ப்பாட்டமாக நடந்துவருவதை அறிவோம். அங்கொன்றும் இங்கொன்றும் தமிழுக்கு ஆக்கமான வேலைகள் அமைதியாக நடைபெறுவதனைக் காணும்பொழுது மகிழ்ச்சி தோன்றுகின்றது.

பிறதுறைகளில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தாய்மொழியாம் தமிழுக்கு ஆக்கமான வேலைகளைச் செய்யும்பொழுது அவர்களைத் தொழுது வணங்கவேண்டியுள்ளது. தொழில்நுட்பத்தைக் காசுபார்க்கும் கலையாகப் பலர் செய்கின்றனர். சிலர் தொண்டு உணர்வுடன் செய்கின்றனர். தொண்டு உணர்வுடன் தொழில்நுட்ப அறிவைத் தமிழுக்கு வழங்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை நான் காணும்பொழுதெல்லாம் பாராட்டத் தயங்கியதே இல்லை. அவ்வகையில் மதுரையில் பிறந்து புனேயில் பணிபுரிந்துவரும் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் நாவி என்னும் மொன்பொருளைக் கண்டு மகிழும் ஒரு வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

நாவி என்பது தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்தும் இலவச மென்பொருளாகும். இதில் அடிப்படையான சந்திப்பிழைகளைத் திருத்தும் வசதி உள்ளது. பிறமொழிச்சொற்கள், உயர்திணைப்பெயர்கள் இவற்றைத் திருத்த இந்த மென்பொருள் உதவாது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். தமிழ் இணையக்கல்விக்கழக நூலகத்தில் இட்பெற்றுள்ள நூல்கள், கவிக்கோ ஞானச்செல்வன் நூல், புகழ்பெற்ற பதிவர்களின் எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

2011 இல் தொடங்கிய முயற்சி இடையில் தொய்வுற்றுள்ளது. மீண்டும் திருத்தியைச் சீர்செய்து இப்பொழுது பொதுவெளியில் வைத்துள்ளார். தமிழறிஞர்கள், இலக்கண ஆர்வலர்கள் பிழை திருத்தம் சார்ந்து நீச்சல்காரனுக்கு உதவினால் தமிழுக்கு ஆக்கம் நல்கும் இலவச மென்பொருளாக உலகத் தமிழர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.

நாவி மென்பொருளை மட்டுமன்றி ஆடுபுலியாட்டம், கோலங்கள் குறித்த நிரலையும் நீச்சல்காரன் தந்துள்ளார். 25 அகவை இளைஞராகத் தெரியவரும் நீச்சல்காரன் தன் முகத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. அவரின் பணிவும், அடக்கமும் எனக்கு மகிழ்ச்சி தந்தது. எதிர்நீச்சலிட்டுத் தமிழுக்கு உழைக்கும் நீச்சல்காரனைத் தமிழன்னை வாழ்த்துவாளாக!.

நீச்சல்காரனின் பணிகளைப் பார்வையிட…

நாவியில் பிழைகளைச் சரிபார்க்க…

9 கருத்துகள்:

முனைவர். வா.நேரு சொன்னது…

நீச்சல்காரனுக்கு வாழ்த்துக்கள். நல்ல முயற்சியைப் பாராட்டி வலைத்தளத்தில் பதிவிட்ட முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இருட்டைக் கண்டு புலம்பாமல், மெழுகுவர்த்தியை ஏற்றாவாவது முய்ற்சிக்கிறேன் என்னும் மனப்பான்மையோடு இணையத்தில் பணியாற்றும் தங்கள் முயற்சி தொடரட்டும்.
முனைவர் வா. நேரு , மதுரை

முனைவர். வா.நேரு சொன்னது…

நீச்சல்காரனுக்கு வாழ்த்துக்கள். நல்ல முயற்சியைப் பாராட்டி வலைத்தளத்தில் பதிவிட்ட முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இருட்டைக் கண்டு புலம்பாமல், மெழுகுவர்த்தியை ஏற்றாவாவது முய்ற்சிக்கிறேன் என்னும் மனப்பான்மையோடு இணையத்தில் பணியாற்றும் தங்கள் முயற்சி தொடரட்டும்.
முனைவர் வா. நேரு , மதுரை

அருள் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அ. வேல்முருகன் சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி

நீச்சல்காரன் சொன்னது…

பிறமொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு சந்தி- வார்த்தைகள் இணையும் போது பிறக்கும் புதிய ஒலிகளை முன்கூட்டியே கணித்து இலக்கணம் கொண்டுள்ள தமிழுக்குத்தான் பெருமையெல்லாம் சேரும்
தங்கள் அன்புக்கு நன்றி. திருத்தியை இன்னும் மேம்படுத்த ஊக்கம் தருகிறது.

நந்தினி மருதம் சொன்னது…

நல்ல தகவல்.
அறிமுகm செய்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.

நீச்சல்காரன் மிகவும் பாரட்டிற்குரியவர் வாழ்க அவர் பணி
-------------------------------------
நந்தினி மருதம்
நியூயாக, 2012-06-30

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

mikka nandri anna parindhuraikku nandri

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

arimuhathirku nandri anna

Dr.Vee சொன்னது…

நீச்சல்காரன் பணிகளும், சுயநல நோக்கின்றி அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் மு.இளங்கோவனின் பணிகளும் இருண்ட தமிழ் உலகில்,'இருட்டைக் கண்டு புலம்பாமல், மெழுகுவர்த்தியை' ஏற்றும் முயற்சிகளே.
இருள் நீங்கி, தமிழ் வெளிச்சத்தில் தமிழர்கள் வாழும் காலம் அதிக தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள்.