நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளிவந்துவிட்டன...


அயலகத் தமிழறிஞர்கள்

நான் தமிழ் ஓசையில் தொடராக எழுதிய அயலகத் தமிழறிஞர்கள் கட்டுரைகள் நண்பர்களின் ஒத்துழைப்புடன் நூலாகியுள்ளது.30 அயலகத்து அறிஞர்களின் வாழ்க்கை,தமிழ் இலக்கியப் பங்களிப்புகள் பதிவாகியுள்ளன.

கால்டுவெல்,போப்,கமில்சுவலபில்,அலெக்சாண்டர் துபியான்சுகி,அ.கி.இராமானுசன் தனிநாயகம் அடிகளார்,க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு,
நா.சுப்பிரமணியன்,ஆ.வேலுப்பிள்ளை,குறிஞ்சிக்குமரானர்,திருமாலனார்,
முரசு.நெடுமாறனார்,சுப.திண்ணப்பன்,ஆ.இரா.சிவகுமாரன்,நா.கண்ணன்,பிரான்சுவா குரோ,ஈவா வில்டன்,தாமசு லேமான், சிவகுருநாதப் பிள்ளை,பர்ரோ,எமனோ உள்ளிட்டவர்கள் வராலறு இந்த நூலில் உள்ளன. இவ்வறிஞர் பெருமக்களின் படங்களும் உள்ளன.200 பக்கம் கொண்டது இந்த நூல். விலை 200.00 உருவா.அழகிய அச்சு.கண்ணைக் கவரும் வண்ணப்படம்.

இந்த நூலைக் கற்று மகிழ்ந்த முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்)மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ,சென்னைப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் வ.செயதேவன், இலக்கியத்துறைத்தலைவர் வீ.அரசு,பேராசிரியர் கனல்மைந்தன்(கோவை),பேராசிரியர் முருகேசன்(கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,கோவை), பேராசிரியர் தி.பெரியசாமி(பெரியார் பல்கலைக்கழகம்,சேலம்),பேராசிரியர் இரா.சந்திரசேகரன்(அரசு கலைக்கல்லூரி, ஊட்டி) ஆகியோர் பாராட்டுச்செய்தியும் வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளனர்.

தமிழ் இணையம் சார்ந்தும் இணையத்துக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்வியல் சார்ந்தும் நான் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாகியுள்ளது. இதில் தமிழ் இணைய அறிமுகம்,இணைய இதழ்கள்,இணையக்குழுக்கள், தமிழ் விக்கிப்பீடியா குறித்த அரிய செய்திகள் உள்ளன.தமிழ் இணையத்துக்குப் பாடுபட்ட காசி,முகுந்து,கோபி,விருபா.குமரேசன்,திரட்டி வெங்கடேசு ஆகியோரின் நேர்காணல்களும் உள்ளன.இணையத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது.

இணையம் கற்போம்

இந்த நூல் 112 பக்கம் அளவுடையது.விலை உருவா 100.00

தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.அல்லது 300.00 பணம் பணவிடை(M.O.) அனுப்புவதுடன் தெளிவான முகவரியும் அனுப்புங்கள்.தனித்தூதில் எங்கள் செலவில் அனுப்பிவைப்போம்.

தொடர்புக்கு

செல்பேசி எண் : + 91 9442029053
மின்னஞ்சல் : muelangovan@gmail.com

வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்),
கங்கைகொண்ட சோழபுரம்(வழி),
அரியலூர்(மாவட்டம்),தமிழ்நாடு.
612 901

3 கருத்துகள்:

விருபா - Viruba சொன்னது…

கால்டுவெல்,போப்,கமில்சுவலபில், தனிநாயகம் அடிகளார்,க.கைலாசபதி, கா.சிவத்தம்பி
வரிசையில்

நா.கண்ணன்

நல்ல முதுகுசொறிதல்தான்

அப்பப்பா இதை முனைவர் பொற்கோ, முனைவர் வீ,அரசு மற்றும் பலர் கற்று மகிழ்ந்தனரா?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இவ்விரு நூல்களும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இணைய அன்பர்களுக்கும் மிகுந்த பயனாக அமையும்.

மிக்க மகிழ்ச்சி ஐயா. மனமார்ந்த பாராட்டுகளை வணக்கத்துடன் தெரிவிக்கின்றேன்.

tamilthiru சொன்னது…

தாங்களின் தமிழ்ப் பணி மென்மேலும் தொடர்ந்து பயணிக்க வாத்துகிறேன்.

பேரன்புடன்
சா.திருப்பதிசாமி