நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கின் இரண்டாம்நாள் நிகழ்ச்சி தொடங்க உள்ளது…

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் இரண்டாம் நாள் கருத்தரங்கநிகழ்வு காலை பத்து மணிக்குத் தொடங்க உள்ளது.மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் அமைந்துள்ள சேதுபதி அரங்கில் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் பொது அமர்வில் சிறப்புரையாற்ற உள்ளேன்.இந்தியாவின் பல பல்கலைக்கழகம்,கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.மலேசியா,சிங்கப்பூர் பேராளர்களும் வருகை தந்துள்ளனர்.

1 கருத்து:

நா. கணேசன் சொன்னது…

சேதுபதி அரங்க உரை சிறப்பாக அமைந்திருக்கிறது. பல தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் இணையத்தின் பயனை விளக்கியமைக்குப் பாராட்டுதல்கள்.