இரகுநாத் மனே மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர்.புதுவையைச் சார்ந்த இவரும் நானும் புதுவைப் பல்கலைக்கழத்தில் ஆய்வு மாணவர்களாக இருந்தபொழுது ஒன்றாகப் பழகினோம். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 23.02.2007 இல்
கண்டேன்.
பழைமையை மறவாமல் பழகினோம். பிரான்சு நாட்டுக்குப் பயணமான இவருடன் நெருக்கடியான சூழலிலும் உரையாடினேன். பல குறுவட்டுகளில் பாடியுள்ளார்.நடித்துள்ளார். இவருக்கு நிகராகத்தமிழ் நாட்டிய உலகில் ஒப்புமை காட்ட ஒருவரும் இல்லை. அந்த அளவு நாட்டியத்தைத் தம் உயிர்மூச்சாக்கிக்கொண்டவர். தமிழ் மரபு மீட்கும் உலகம் புகழும் இரகுநாத்மனே அவர்களைத் தமிழ்த்திரைப்படத் துறையினரும், மக்கள் தொலைக்காட்சி முதலான ஊடகத்துறையினரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நாட்டிய நன்னூல் நன்கு கற்ற இந்த மேதையைத் தமிழ் உலகிற்கு முன்மொழிந்து அறிமுகப்படுத்துவதில் உள்ளம் பூரிப்படைகிறேன். இவரைப் பற்றி விரிவாக எழுதுவேன். மேலும் அறிய www.raghunathmanet.com
மு.இளங்கோவன்,புதுச்சேரி
பேசி -9442029053