நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 ஜூலை, 2007

ஓவியக்கண்காட்சியும் விற்பனைக்கூடமும்

ஓவியக்கண்காட்சியும் விற்பனைக்கூடமும்

புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில்
புதுவை ஓவியத்தந்தை வரத-செகநாதன் அவர்கள் வரைந்த பல ஒவியப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இடம்: 112,காமாட்சியம்மன் கோவில் தெரு, புதுச்சேரி-605001

நேரம் : காலை 10.00 -12.00 மாலை 2.00 - 5.00

தொடர்பிற்கு : 0413-2290335 94869 08166

ஓவியம் வரைந்தான் அவன்தன் உளத்தின்
பாவியம் வரைந்தான் பார்ப்பவர் நெஞ்சகம்
பொங்க வரைந்தான் புத்தொளி வீசி
இங்கு வரைந்தான் எழிலோ வியமே !

-புலவர் பாளை எழிலேந்தி

வியாழன், 19 ஜூலை, 2007

ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா

21.07.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையில் அமைந்துள்ள தமிழ் திருமண மண்டபத்தில் ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா
மிகச்சிறப்புடன் நடைபெற உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தா.பெ.அ.தேன்மொழி பாடவும்,வரவேற்புரையைக் கோ.மணிமாறன் ஆற்றவும்,தலைமையுரையைக் கோ.தாமரைக்கோ நிகழ்த்தவும் உள்ளனர்.

தென்மொழி,தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் தாமரைப்பெருஞ்சித்திரனார் தொடக்க வாழ்த்துரை வழங்குகிறார்.

அறிஞர் செழியன்,அறிஞர் தமிழநம்பி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

தென்மார்க்கைச் சேர்ந்த அன்றன் அவர்கள் நூல்களை வெளியிடவும்
தஞ்சை மருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் மு.குலாம் முகைதீன் நூல்களைப்பெறவும் உள்ளனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியன் சிறப்புப் பேருரையாற்ற உள்ளார்.

ஆய்வறிஞர் ப.அருளி அவர்கள் ஏற்புரையாற்றவும்,சீனு.தமிழ்மணி அவர்கள் நன்றியுரையாற்றவுமுள்ளனர்.

வேரியம் பதிப்பகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளது.

செய்தி:
முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி,இந்தியா
+ 9442029053
muelangovan@gmail.com
muelangovan.blogspot.com

ஞாயிறு, 1 ஜூலை, 2007

புதுச்சேரியில் பாரதி குறும்பட வெளியீட்டு விழா

குணவதிமைந்தனின்
புதுச்சேரியில் பாரதி குறும்பட வெளியீட்டு விழா

பார்வை படைப்பகமும் புதுச்சேரி மக்கள் திரைப்படக்கூட்டுக்கழகமும் இணைந்து புதுச்சேரியில் பாரதி என்னும் குறும்படத்தை வெளியிடுகின்றன.
01.07.2007 ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு விழா
நடைபெறுகிறது.
இடம்: புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள 62, சுய்ப்பிரேன் வீதியில் உள்ள புதுவை மாநிலக்கூட்டுறவு ஒன்றியக் கருத்தரங்க அறையாகும்.
வரவேற்புரை: அசோக் ஆனந்த்.
முன்னிலை: பாண்டியன்
தொடக்கவுரை: வே..பாலன்
தலைமை: தி.முருகேசன்

குறும்படத்தைப் புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் வெளியிடுகிறார்கள்.

புதுச்சேரியில் பாரதி நூலைப் புதுவை அரசின் கல்விஅமைச்சர் M.O.H.F.ஷாஜகான் வெளியிடுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் S.P.சிவக்குமார்,R.விசுவநாதன், அரசுச்செயர்கள் S.குமாரசாமி, அ.அன்பரசு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.விழாவில் கி.இராசநாராயணன், திருப்பூர் கிருட்டிணன்
அ.அறிவுநம்பி,பாரீஸ் பார்த்தசாரதி,ஆர்.முகுந்தன், க.பஞ்சாங்கம்,கே.எஸ். அன்புச்செல்வம்,ஏ.வி.வீரராகவன் நாக.செங்கமலத்தாயார் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஏற்புரையாற்றவும் தயாரிப்பாளர் அம்சவேணி நன்றியுரைக்கவும் உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி-605003, இந்தியா
+ 9442029053