நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 16 ஜூன், 2011

அமெரிக்காவின் பென்சில்வேனியா வந்துசேர்ந்தோம்…

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தமிழ் இணையமாநாட்டில் கலந்துகொள்ளும் தமிழகப் பேராளர்கள் எட்டுப்பேர் அமெரிக்க நேரப்படி 16.06.2011 காலை 6.10 மணிக்கு நியூயார்க் நகரில் உள்ள சான் கென்னடி பன்னாட்டு விமானநிலையத்திற்கு ஏர்இந்தியா வானூர்தியில் வந்துசேர்ந்தோம். அதன்பிறகு காக்சு அண்டு கிங்சு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்தில் பென்சில்வேனியாவில் உள்ள ஆம்டன்(HAMTON) விடுதிக்கு மூன்றுமணி நேரப் பயணத்தில் வந்துசேர்ந்தோம். பயணக்களைப்பு அனைவருக்கும் ஏற்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு விரிவான செய்திகளைத் தெரிவிக்க இயலும்.

6 கருத்துகள்:

அண்ணாகண்ணன் சொன்னது…

வாழ்த்துகள்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

மதுரை சரவணன் சொன்னது…

nallathu...

alagan சொன்னது…

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பிப்
பரவசமடையும் தமிழ்ச் சான்றோர்களே !
தங்கள் அமெரிக்க வருகை நல்வரவாகுக!
அழகப்பன்
Natarajan Alagappan
104,Cheswick Drive,
North Wales,PA 19454

ganesh gandhi சொன்னது…

மிக்க மகிழ்ச்சி ஐயா

ஏ.எழில்வசந்தன் சொன்னது…

வாழ்த்துக்கள்!
வெற்றிவாகை சூடி வருக!

மணிவானதி சொன்னது…

வாழ்த்துக்கள்

செம்மொழித்தமிழ் வாழ்க.
இணையமாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.