நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஜூன், 2011

பேராசிரியர் பொற்கோ அவர்களின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழா


தொடக்க விழா நிகழ்ச்சி நிரல்(படத்தை அழுத்திப் பெரியதாகப் பார்க்கலாம்)

தமிழறிஞராகவும் மொழியியல் அறிஞராகவும் உலக அளவில் மதிக்கப்படும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் பொற்கோ அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் 11.06.2011 காரி(சனி)க் கிழமை காலை 10 மணி முதல் மாலை எட்டுமணி வரை நடைபெற உள்ளது.

தொடக்க விழாவினைத் தொடர்ந்து மூன்று அமர்வுகளில் பேராசிரியர் பொற்கோ அவர்களின் படைப்பு, ஆய்வுப்பணிகள் குறித்து அறிஞர்கள் ஆய்வுரைகள் வழங்க உள்ளனர். மாலையில் வாழ்த்துரையுடன் கூடிய பாராட்டு விழாவில் “ஆய்வுலகில் பொற்கோவின் பாதையும் பயணமும்”, “தமிழக வரலாற்றில் விளக்கும் வெளிச்சமும்” ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

மேலும் கண்ணியம் இதழின் சிறப்பு வெளியீடாகப் “பேராசிரியர் பொற்கோவின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாச் சிறப்பு மலரும்” வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தின் அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த விழாவுக்குத் தமிழார்வலர்கள்,ஆய்வாளர்களை விழாக்குழுவினர் அழைத்து மகிழ்கின்றனர்.


ஆய்வரங்குகள்(படத்தை அழுத்திப் பெரியதாகப் பார்க்கலாம்)


நிறைவு விழா(படத்தை அழுத்திப் பெரியதாகப் பார்க்கலாம்)

2 கருத்துகள்:

T.S.Kandaswami சொன்னது…

மூச்சு, பேச்சு,பார்வை,நுகர்வு, உணர்வு, உடம்பு --அனைத்தும் தமிழ் !!
. துருதுருவென்ற இயல்பு. அறிவு, கனிவு, கருணை, இனிமை--அருமை !!

T.S.Kandaswami சொன்னது…

மூச்சு, பேச்சு,உணர்வு , எண்ணம், நோக்கம் ,உயிர், உடம்பு --அனைத்தும் தமிழே! எளிமை, பொறுமை, திறமை,அன்பு, அறிவு, ஆக்கம்--அனைத்தும் குணங்கள்.! வாழிய நீடூழி !!