வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழன்பர்கள்
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் மருத்துவர் சித்தானந்தம் - முனைவர் குணா அவர்கள், புதுச்சேரியிலிருந்து வருகைபுரிந்துள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சி மேங்கோ குரோ உணவகத்தில் 22.06.2011 மாலை 7 மணிக்குத் தொடங்கியது. மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் மு. அனந்தகிருட்டினன் அவர்கள் கலந்துகொண்டு மு.இளங்கோவனின் தமிழ் இணையப் பணியைப் பாராட்டிப் பேசினார். அடுத்து முனைவர் மு.இளங்கோவன் இலக்கியம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் நூல்களின் சிறப்பை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் உள்பட பல தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.
முனைவர் மு.அனந்தகிருட்டினன் அவர்களின் வாழ்த்துரை
மருத்துவர் சித்தானந்தம் வரவேற்பு
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்க்குடும்பத்தார்
மருத்துவர் சித்தானந்தம்,மு.இ, முனைவர் குணா
4 கருத்துகள்:
மானத்தையும் அறிவையும் மதிப்புறு அணிகலன்களாக்கிக் கொண்டு மங்காத் தமிழின் சிறப்பையும் தமிழர் பண்பாட்டையும் அதன் இலக்கியப் பொற்குவையிலிருந்து எடுத்து தமிழ் இணையவழி கொலம்பியா வரையிலும் கொண்டு சென்று பரப்புரைப் பணிசெய்யும் தங்கள் தளராத் தமிழ்ப்பணியினைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உலகமெலாம் தமிழோசை பரப்பும் தங்கள் தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துகள்.. என்றும் அன்புடன் பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை தமிழ்நாடு.
வாழ்த்துக்கள்
கொலம்பியா வந்துவிட்டோம் :)
வாழ்த்துக்கள்.
ஐயா தங்கள் பதிவும், புகைப்படங்களும் அமெரிக்காவை கண் முன் விரித்துவிட்டது. அருமை.
கருத்துரையிடுக