இலக்கணச்சுடர் முனைவர் இரா.திருமுருகனார்
(16.03.1929 - 03.06.2001)
தமிழ் இலக்கணத்திலும், இசையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடி புலமைபெற்றுப் பெரும்புகழுடன் விளங்கிய மூத்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று(03.06.2011) புதுச்சேரியில் அவர் இல்லத்தில் நினைவுகூரப்பட்டது. புதுச்சேரி, எண் 62,மறைமலையடிகள் சாலையில் உள்ள பாவலர் பண்ணை இல்லத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. புதுவைத் தமிழறிஞர்களும், குடும்பத்தாரும் கலந்துகொண்டு ஐயாவின் நினைவினைப் போற்றினர்.
04.06.2011(காரி)சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை இரா.திருமுருகனார் நினைவு அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ளது.
புலவர் செ.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றவும்,முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் தலைமையுரையாற்றவும் புலவர் அரங்க.நடராசனார் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் திருமுருகனார்: புலவர், கலைஞர், போராளி என்ற தலைப்பில் அறக்கட்டளைப் பொழிவு நிகழ்த்த உள்ளார்.
முனைவர் க.இரவிசங்கர் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.
இடம்: மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனம், இலாசுப்பேட்டை,புதுச்சேரி
நாள்: 04.06.2011 நேரம் முற்பகல் 10.30 முதல் பகல் 1-00 மணி வரை
1 கருத்து:
முனைவர் மு.இ அவர்களுக்கு,
வணக்கம். உங்களுடையப் பதிவுகளைத் தொடக்கத்திலிருந்தே படித்து வருகிறேன். ஆய்வின் அடிப்படையில் வரும் உங்கள் கட்டுரைகள், பயனுள்ளவைகளாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளன. ஆனால், அண்மைக் காலங்களில் உங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை இவ்வலைப்பூவில் என்னால் காண முடியவில்லை.
மீண்டும், ஆய்வுக்கட்டுரைகளைப் பதியுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
கருத்துரையிடுக