சனி, 7 ஏப்ரல், 2012
எழுத்தாளர் சங்கமித்ரா மறைவு
எழுத்தாளர் சங்கமித்ரா
பெரியாரியல் அறிஞரும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வடநாட்டிற்குச் சென்று மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவரும், பன்னூலாசிரியரும், இதழாசிரியருமான அறிஞர் சங்கமித்ரா அவர்கள் இன்று (07.04.2012) காலை திருச்சிராப்பள்ளி -தென்னூரில் உள்ள மணிகண்டன் பிளாசா குடியிருப்பில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். சங்கமித்ராவுக்கு அகவை 72 ஆகும். நாளை 08.04.2012 காலை எட்டுமணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பெறும்.
பலவாண்டுகளாக என்னுடன் நல்ல தொடர்பில் இருந்த எழுத்தாளர் சங்கமித்ரா அவர்களை மருத்துவர் நா.மாசிலாமணி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். சங்கமித்ரா அவர்கள் எழுதிய ஓர் எருதும் சில ஓநாய்களும் என்னும் நூல் புகழ்பெற்ற ஒன்றாகும். வங்கியில் மேலாளராகப் பணியாற்றிப் பலருக்கும் உதவியாக வாழ்ந்தவர். தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சங்கமித்ரா பதிலளிக்கிறார், பெரியார் முழக்கம் உள்ளிட்ட பல இதழ்களை நடத்தியவர்.
சங்கமித்ரா அவர்கள் எழுத்தாளர் கி.இரா அவர்களை உயர்வாக மதித்தவர். புதுச்சேரிக்கு வரும்பொழுது மறவாமல் எழுத்தாளர் கி.இரா அவர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். சங்கமித்ராவின் இறப்புச்செய்தி அறிந்ததும் கி.இரா. அவர்கள் பெரிதும் வருந்தினார்கள்.
சங்கமித்ரா அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
எழுத்தாளர் சங்கமித்ரா அவர்களின் மறைவுக்கு வருந்துகிறேன்.
என் ஆழ்ந்த வருத்தங்கள்!
எழுத்தாளர் சங்கமித்ரா அவர்களின் மறைவுக்கு வருந்துகிறேன்.
என் ஆழ்ந்த வருத்தங்கள்
நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.
நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.
நல்ல சிந்தனையாளரைத் தமிழகம் இழந்து தவிக்கிறது. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழினம், தமிழன் தலைநிமிர அயராது உழைத்தவர்
சங்கமித்திரா (பா.ராமமூர்த்தி).
ஆழ்ந்த இரங்கல்கள்.
இரு கிழமைகளுக்கு முன் தான் அவருக்கு மடல் அனுப்பினேன். இன்னும் விடையில்லையே என காத்திருந்தேன். அவர் உடல் நலமில்லாமல் இருந்து மறைந்த செய்தியறிந்து வருந்துகிறேன். புது தில்லியிலிருக்கும் தோழர் வே. ஆீனைமுத்து அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவரது இல்லத்துக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த என் நண்பனுடன் சென்ற போது விருந்தளித்து உபசரித்தது நினைவுக்கு வருகிறது. என் குடும்பத்தில் இழப்பு ஏற்பட்ட போது, அவர் தன் துணைவியாருடன் வந்து ஆறுதல் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும் என் அழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நக்கீரன் கோபால் போன்ற தகுதியற்றவர்களுக்கு தமிழக அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்விருதுக்கு தகுதியான ஒருவர், அந்த விருது பெறாமாலேயே மறைந்து விட்டார்.
என் இனிய நண்பர் சங்கமித்ரா,10 வருட நட்பு, அற்புதமான மனிதர். பெரியார் பெருந்தொண்டர். அவரது துணைவியாருக்கும் மகனுக்கும் மற்றும் அவர் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
- புதியமாதவி,
Los Angeles, USA
கருத்துரையிடுக